Sanchayan On Air

Informações:

Sinopsis

A Place to store my Broadcast Files

Episodios

  • “We won’t stop with a petition” !! / “மனு கொடுத்ததோடு இந்தப் போராட்டம் நின்றுவிடாது” !!

    20/01/2017 Duración: 06min

    ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி, சிட்னி வாழ் தமிழர்கள், சிட்னியிலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில் மனு ஒன்றைக் கையளித்தார்கள்.  இந்தப் போராட்ட நிகழ்விலிருந்து நேரடியாக செய்தி விவரணம் ஒன்றைத் தொகுத்துத் தருகிறார் குலசேகரம் சஞ்சயன். Sydney Tamils submit a

  • Where is Australian Education heading? / மாணவர்கள் படிப்பைக் கைவிடுவது ஏன்?

    20/01/2017 Duración: 05min

    ஆஸ்திரேலியாவில் மாணவர்கள் எதிர்காலம் என்ன?  கடந்த பத்து வருடத்தில், கல்விக்காக மாணவர்கள் செலுத்தும் கட்டணம் பல் மடங்காக உயர்ந்துள்ளது என்று, Australian Scholarships Group சொல்கிறது.  தனியார் கல்விநிலையங்களாக இருந்தால் அந்த அதிகரிப்பு 60 சதவீதமாக இருக்கிறது.  கல்வி நிலையத்திற்குச் செலுத்த

  • A month for Canadian Tamils ! / கனேடிய தமிழருக்கு ஒரு மாதம் !

    16/01/2017 Duración: 19min

    ஜனவரி மாதத்தை, தமிழர் பாரம்பரியத்திற்கு முதன்மை தரும் மாதமாகப் பிரகடனப் படுத்தி, கனேடிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது.  கனேடிய நாடாளுமன்றத்தில் அதனை முன்மொழிந்தவர், Garry ஆனந்தசங்கரி என்று அறியப்படும், சத்தியசங்கரி ஆனந்தசங்கரி. இப்படியான ஒரு தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் ஒரு சட்டமாகத்

  • Helensburgh Temple… What happened at the AGM? / ஹெலன்ஸ்பேர்க் ஆலயம்… பொதுக்குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?

    15/01/2017 Duración: 05min

    சிட்னி புறநகர் ஹெலன்ஸ் பேர்க்கில் இயங்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயம் சுமார் 40 ஆண்டுகால வரலாறு கொண்ட ஆலயம். இந்த ஆலயத்தை நிர்வகித்துவரும் Sri Venkateswara Temple Association எனும் அமைப்பின் நிர்வாகக் குழுவை இந்த அமைப்பைச் சார்ந்த சில உறுப்பினர்கள்

  • Bidding Goodbye… Barak style / விடை பெறுகிறார் ஒபாமா …… பராக் பராக் பராக்

    13/01/2017 Duración: 04min

    மக்களாட்சியின் மணிமகுடம் என்று சொல்லப்படும் அமெரிக்காவின் அதிபர் Barack Obama, விடை பெறுகிறார் என்பது நாம் அறிந்த செய்தி. அமெரிக்க அதிபராக அவர் ஆற்றிய கடைசி உரையில் அமெரிக்க மக்களிடம் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். மக்களாட்சியைக் கடைசி வரை காப்பாற்றுங்கள் என்பது

  • Sydney Tamils’ solidarity with Tamils in Tamil Nadu! / ஜல்லிக்கட்டு ஆதரவு நிகழ்வில் சிட்னி தமிழர்கள்!

    13/01/2017 Duración: 04min

    தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மீதான தடை தொடர்கிறது. இந்த தடையை நீக்கக் கோரி தமிழகமெங்கும் நடந்துவரும் ஆர்பாட்டங்களுக்கு ஆதரவாக  இன்று ஆஸ்திரேலியத் தமிழர்களும் சிட்னி மற்றும் மெல்பேர்ன் நகரங்களில் தமிழர் ஒன்றுகூடல் என்று பெயரிட்டு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தும் நிகழ்வுகளை

  • Pongal Festival in Sydney! / திறந்த வெளியரங்கில் மாபெரும் பொங்கல் விழா!

    09/01/2017 Duración: 07min

    யாழ்ப்பாணம் இந்து பழைய மாணவர் சங்கமும் சிட்னி தமிழ் வர்த்தகர்களும் இணைந்து நடத்தும் மாபெரும் பொங்கல் விழா, சிட்னி பெண்டில்ஹில் சிவிக் பூங்காவில் எதிர்வரும் சனிக்கிழமை நடக்கவிருக்கிறது.  இது குறித்த மேலதிக விபரங்களை அறிவழகனும் ரிஷியும் குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

  • “My wife’s father wanted her to change religion” / “என் மனைவியை, அவர் தந்தையே மதம் மாறச் செய்தார்”

    08/01/2017 Duración: 13min

    அண்மையில் B H அப்துல் ஹமீட் அவர்கள் சிட்னி வந்திருந்த போது நமது நிலையக் கலையகத்திற்கு வந்து நீண்ட ஒரு நேர்காணலை வழங்கியிருந்தார். அதன் இறுதிப் பாகத்தில், தனது தனிப்பட்ட வாழ்வு குறித்த பல சுவையான செய்திகளையும் மனம் திறந்து பகிர்ந்து

  • Pongal Vizha 2017 / மாபெரும் பொங்கல் விழா 2017

    06/01/2017 Duración: 33s

    Brisbane தாய் தமிழ் பள்ளி Queensland மாநில அரசினதும் பல்வேறு தமிழ் அமைப்புகளினதும் ஆதரவுடன் நடத்தும் மாபெரும் பொங்கல் விழா 2017.

  • “How did I escape from the vices?” / “கெட்ட பழக்கத்திலிருந்து எப்படித் தப்பித்தேன் ?”

    06/01/2017 Duración: 23min

    அண்மையில் B H அப்துல் ஹமீட் அவர்கள் சிட்னி வந்திருந்த போது நமது நிலையக் கலையகத்திற்கு வந்து நீண்ட ஒரு நேர்காணலை வழங்கியிருந்தார். அதன் இரண்டாவது பாகத்தில், எந்த வித கெட்ட பழக்கத்திலுமிருந்து எப்படித் தப்பிக் கொண்டார் என்பதையும், வானொலி குறித்த

  • Travel Domestic / உள்ளூர் பயணிகள் மட்டும் !!

    06/01/2017 Duración: 02min

    பல ஆஸ்திரேலியர்கள் உள்நாட்டிலேயே சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ள விரும்புவது ஏன் என்ற கேள்விக்குப் பதில் தரும் வகையில் Brianna Roberts மற்றும் Michelle Rimmer எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன். Why are more Australians choosing to holiday

  • Fuel Efficiency / வாகன விலை கூடுகிறது

    06/01/2017 Duración: 02min

    ஆஸ்திரேலியாவில் விற்கப்படும் பெற்றோலின் தரம் குறைவாக இருக்கிறது என்று அதன் தரக் கட்டுப்பாட்டை அரசு அதிகரிக்க இருக்கிறது. வாகன உற்பத்தியாளர்களும் இந்த முடிவை வரவேற்றுள்ளார்கள். ஆனால், எரிபொருள் தயாரிப்பாளர்களுக்கு அதிக நாட்டமில்லை. இதனால் பலர் வேலை இழக்கக்கூடும் என்றும், பல எரிபொருள்

  • I am a Tamil First / “முதலில் நான் தமிழன்…. பிறகு தான் முஸ்லிம்”

    04/01/2017 Duración: 17min

    மக்கள் மனதில் அதிக இடம் பிடித்துள்ள தமிழ் அறிவிப்பாளர் யார் என்று கேட்டால் அநேகமானவரிடமிருந்து B H அப்துல் ஹமீட் என்று தான் பதில் வரும்.  அண்மையில் அவர் சிட்னி வந்திருந்த போது நமது நிலையக் கலையகத்திற்கு வந்து நீண்ட ஒரு

  • Cause of SIDS is identified / சடுதியாகக் குழந்தைகள் இறப்பது ஏன்?

    02/01/2017 Duración: 10min

    சடுதியாகக் குழந்தைகள் இறப்பது ஏன் என்ற கேள்விக்குப் பதில் கண்டுபிடித்திருக்கிறார்கள், வெஸ்ட்மீட் குழந்தைகள் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள்.  SIDS என்று விவரிக்கப்படும், குழந்தைகள் சடுதியாக இறப்பது குறித்த ஆராய்ச்சியில் ஒரு தமிழரும் ஈடுபட்டுள்ளார். அருண்யா விவேகானந்தராஜா, தனது ஆராய்ச்சி குறித்தும் பெற்றோர் கவனிக்க

  • First People Facts / பூர்வீக மக்கள் குறித்த சில உண்மைகள்

    30/12/2016 Duración: 08min

    பூர்வீக மக்கள் மற்றும் Torres Strait தீவினைச் சேர்ந்த மக்கள் குறித்த தரவுகள், உண்மைகள் பலருக்குத் தெரியாமலிருக்கிறது.  First Contact என்ற SBS தொலைக் காட்சித் தொடர் ஒளிபரப்பாகுமுன், SBS வானொலி சில தரவுத் துளிகளை பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பியது.  அதனைத்

  • Sydney to Hobart yacht race / சிட்னியிலிருந்து ஹோபார்ட் வரை உல்லாசப் படகுப் போட்டி

    28/12/2016 Duración: 03min

    காலத்துளி நிகழ்ச்சியில் வருடாவருடம் நடைபெறும் சிட்னியிலிருந்து ஹோபார்ட் வரையான உல்லாசப் படகுப் போட்டியின் வரலாறு குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on the history of the annual

  • Year in Review: Sports 2016 / விளையாட்டு 2016: ஒரு மீள்பார்வை

    26/12/2016 Duración: 10min

    முடிவிற்கு வரும் 2016 ம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்திய விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் முடிவுகள் குறித்த தொகுப்பு இது. முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன். Kulasegaram Sanchayan reviews major sporting events and stories that

  • True meaning of Christmas / உலகை புரட்டிப்போட்டவர் பிறந்த நாளிள் அர்த்தம்!

    25/12/2016 Duración: 16min

    உலகெங்கும் விமர்சையாகக் கொண்டாடப்படும் ஒரு விழா, கிறிஸ்துமஸ் விழா. கிறிஸ்துமஸ் உலகிற்குத் தரும் செய்தி என்ன? கிறிஸ்துமஸ் தினத்தின் உண்மையான அர்த்தம் என்ன என்று, Missions Fellowship Australia என்ற அமைப்பைச்சார்ந்த John Anandanathan விளக்குகிறார்.  அத்துடன், கிறிஸ்துமஸ் தினம் குறித்த

  • Year in Review: World 2016 / உலகம் 2016: ஒரு மீள்பார்வை

    21/12/2016 Duración: 11min

    முடிவிற்கு வரும் 2016 ம் ஆண்டில் ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் இந்தியா தவிர்ந்த மற்றைய உலக நாடுகள் சார்ந்த, அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்திய சம்பவங்கள் குறித்த தொகுப்பு இது. முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன். Kulasegaram Sanchayan reviews

  • Edward John Eyre attempts the first overlanding venture / தரைவழியாக கால்நடைகளை எடுத்துச் செல்வதற்கான முதல் முயற்சி

    21/12/2016 Duración: 03min

    காலத்துளி நிகழ்ச்சியில், நியூ சவுத் வேல்ஸ் காலனியிலிருந்து, தரைவழியாக கால்நடைகளைத் தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு எடுத்துச் செல்வதற்கான முதல் முயற்சியில் ஈடுபட்ட Edward John Eyreவின் பயணம் குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram

página 2 de 36