Sbs Tamil - Sbs

ஏன் Cairns நகரை தேர்ந்தெடுத்தேன்? இந்த நகரம் உங்களுக்கும் பிடிக்கும்!

Informações:

Sinopsis

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Cairns நகரின் - Cairns Central Shopping Centre யிலிருந்து SBS ஊடகத்தின் தெற்காசிய மொழி ஒலிபரப்புகளின் “தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி” அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி வியாழக்கிழமை நேரடி ஒலிபரப்பாக ஒலித்தது. இந்த நிகழ்ச்சியில் நாம் விஜி அவர்களை சந்தித்தோம். Real estate எனப்படும் வீடு விற்பனை முகவராக பணியாற்றும் அவர், Cairns எனும் பிராந்திய நகருக்கு குடிபெயர்ந்த அவரின் கதையையும், பிராந்திய நகரங்கள் எப்படி வாழ்வதற்கும், முதலீட்டுக்கும் நல்ல தெரிவு என்றும் விளக்குகிறார். அவரை நேரடி ஒலிபரப்பின்போது சந்தித்து உரையாடியவர் றைசெல். இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இதை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். கேட்கும் நேயர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பின்னணியைப் பொறுத்து வீடு தொடர்பான நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.