Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
‘எல்லாவித்திலும் ‘திமுக, அதிமுக’வை விட விஜய்யின் தவெக முன்னிலையில் உள்ளது’- தவெக பெலிக்ஸ்
21/04/2026 Duración: 14minதமிழ்நாட்டில் முதல் தேர்தலை சந்திக்கிறது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம். இந்த கட்சியின் செயல்பாடுகள், விஜய் மீதான விமர்சனங்கள், திமுக-அதிமுக வழிவந்த திட்டங்களை தவெக பின்பற்றுவது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் பெலிக்ஸ் ஜெரால்டு. அவருடன் உரையாடுகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
ஆபத்தான வைரஸுக்கு எதிராக முதியவர்களுக்கு இலவச தடுப்பூசி- அரசு அறிவிப்பு
21/04/2026 Duración: 02minஆஸ்திரேலிய அரசு நாட்டிலுள்ள முதியவர்களை Respiratory Syncytial வைரஸிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், இலவச தடுப்பூசி திட்டத்தை அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு அரசு வழங்கவுள்ள $1000 வரிச்சலுகை திட்டம்!
21/04/2026 Duración: 02minஆஸ்திரேலிய அரசின் $1000 வரிச்சலுகை திட்டம் மூலம் சுமார் 6.2 மில்லியன் தொழிலாளர்கள் நன்மையடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 21 ஏப்ரல் 2026 - செவ்வாய்க்கிழமை
21/04/2026 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 21/04/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
-
விக்டோரியா மாநிலத்தவர்களுக்கான இலவச பொதுப் போக்குவரத்து சலுகை நீட்டிப்பு!
20/04/2026 Duración: 02minவிக்டோரியாவில் இலவச பொதுப் போக்குவரத்து வசதி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதுடன் ஆண்டு முடிவுவரை போக்குவரத்து கட்டணம் அரைவாசியாக குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
சமூக வலைத்தளங்கள்: குழந்தைகளையும் நம்மையும் சிக்கவைக்கும் மாயவலையா?
20/04/2026 Duración: 14minஅமெரிக்காவில் நடைபெற்ற ஒரு முக்கிய வழக்கில் இளம் பயனர்களுக்கு கேடு விளைவித்ததாக சமூக வலைத்தளங்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக வலைத்தளங்கள் தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்திருக்கும் நிலையில், அமெரிக்க வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இது குறித்து விளக்குகிறார் சமூக ஊடகம் தொடர்பான தொழில்நுட்ப நிபுணத்துவம் கொண்டவரும், பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலி வானொலியின் நிகழ்ச்சி தயாரிப்பாளருமான சுகன்யா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
-
செய்தியின் பின்னணி : நாட்டின் சில பகுதிகளில் ஜூலை முதல் மின்சார கட்டணம் குறைகிறது!
20/04/2026 Duración: 06minநாட்டில் மின்சார கட்டணங்கள் அடுத்த நிதியாண்டில் குறையக்கூடும் என ஆஸ்திரேலிய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள முன்மொழிவு ஆவணம் தெரிவிக்கிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
-
இன்றைய செய்திகள்: 20 ஏப்ரல் 2026 - திங்கட்கிழமை
20/04/2026 Duración: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 20/04/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
சிட்னியில் கோலாகலமாக சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம்
20/04/2026 Duración: 08minசிட்னி தமிழர் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு கடந்த சனிக்கிழமை ஏப்ரல் 18ஆம் தேதி Holroyd Gardens Merrylands-இல் நடைபெற்றது. இந்நிகழ்வில் SBS தமிழ் ஒலிபரப்பின் சார்பில் கலந்துக்கொண்டு அங்கு வந்திருந்த சிலரின் கருத்துகளை கேட்டறிந்து தொகுத்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன்.
-
‘அதிமுக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடியின் ஆட்சி மலரப்போகிறது’ - அப்சரா
19/04/2026 Duración: 11minதமிழக தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக முன்வைக்கும் தேர்தல் வாக்குறுதிகள், எதிர்கொண்டு வரும் அரசியல் விமர்சனங்கள் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு அதிமுகவின் செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி பதலளித்திருக்கிறார். அவருடன் உரையாடியவர் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (12 – 18 ஏப்ரல் 2026)
18/04/2026 Duración: 05minஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (12 – 18 ஏப்ரல் 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றேனுகா துரைசிங்கம்.
-
சிட்னியில் ட்ரோன் சட்டங்களை மீறிய நபருக்கு $8000 அபராதம்!
17/04/2026 Duración: 02minசிட்னியில் ட்ரோன் சட்டங்களை மீறிய நபருக்கு $8000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலியா அறிவோம்: The Big Merinoவின் முக்கியத்துவம் என்ன?
17/04/2026 Duración: 09minராயல் ஆஸ்திரேலியன் மிண்ட் எனும் அரசின் நாணய தயாரிப்பு நிறுவனமும், ஆஸ்திரேலியா போஸ்ட்ம் வெளியிட்ட, ஆஸ்திரேலிய “பிக் திங்ஸ்” தொடரிலும், தேசியக் கருத்துக்கணிப்பிலும் ஆஸ்திரேலியர்களால் மிகவும் விரும்பப்பட்ட, அதிகம் பார்க்கப்பட்ட, கிராமப்புற ஆஸ்திரேலியாவின் புத்திசாலி சின்னமாக விளங்குவது The Big Merino. இதன் வரலாறு, சுவாரஸ்யமான உண்மைகள், அதன் முக்கியத்துவம் என்று பல அம்சங்களை விவரிக்கிறார் உயிர்மெய்யார்.
-
Thinking of a career change? Here are some tips and options to consider - உங்கள் தொழிலை மாற்ற நினைக்கிறீர்களா? தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்
17/04/2026 Duración: 09minLooking to step into a new career? You're not the only one, the stats suggest. No matter your age, background or whether English is your first language, a career change at some point is almost inevitable nowadays. In Australia, support is available to help you through the process. - நீங்கள் உங்கள் தொழில் பயணத்தின் ஆரம்பத்தில் இருந்தாலும் சரி, அல்லது பல வருட அனுபவம் பெற்றிருந்தாலும் சரி, உங்கள் தொழிலை மாற்றுவது ஒரு சவாலான விடயமாக இருக்கலாம். ஆஸ்திரேலியாவில் உங்கள் தொழிலை மாற்றுவதில் என்னென்ன அடங்கும் என்பது தொடர்பில் Zoe Thomaidou தயாரித்த ஆங்கில விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஏன் ‘நாம் தமிழர்’ கட்சி பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவில்லை?
17/04/2026 Duración: 11minதமிழக தேர்தல் களத்தில் இருக்கும் முக்கிய கட்சி நாம் தமிழர் கட்சி. இந்த கட்சியின் பார்வை, அவர்களின் திட்டம், இந்த தேர்தலில் அவர்கள் கொண்டிருக்கும் நோக்கம் குறித்த கருத்துகளை முன்வைக்கிறார் நாம் தமிழர் கட்சியின் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளரான ஸ்ரீதர். அவருடன் உரையாடியவர் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலியா ஏன் இராணுவச் செலவைப் பல பில்லியன்$ அதிகரிக்க முடிவு செய்தது?
17/04/2026 Duración: 07minஆஸ்திரேலியா, அதிகரிக்கும் உலக பாதுகாப்பு அபாயங்களை எதிர்கொள்ள அடுத்த 10 ஆண்டுகளில் கூடுதலாக 53 பில்லியன் டாலர்களால் பாதுகாப்பு செலவினத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடு இராணுவ திறன், ட்ரோன் தொழில்நுட்பம், கடற்படை மற்றும் உள்ளூர் பாதுகாப்பு தொழில்துறையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. ஆனால், செலவின் தெளிவு மற்றும் இது போதுமானதா என்ற கேள்விகளுடன் சில விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இன்றைய செய்திகள்: 17 ஏப்ரல் 2026 - வெள்ளிக்கிழமை
17/04/2026 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 17/04/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
-
தமிழக தேர்தல் களம் – 17 ஏப்ரல் 2026
17/04/2026 Duración: 08minதமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த பின்னணியில் தமிழக தேர்தல் கள நிலவரத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
-
நம்ம ஆஸ்திரேலியா: மக்கள் வந்து குவிந்து நடத்திய தங்க வேட்டை வரலாறு தெரியுமா?
17/04/2026 Duración: 09minஆஸ்திரேலிய வரலாற்றில் தங்கவேட்டை (Gold Rush) என்பது மிகவும் முக்கியமான நிகழ்வு. இந்த தங்க வேட்டையின் பின்னாலிருக்கும் ரகசியங்களும், கதைகளும், வரலாறும் ஏராளம். தங்கவேட்டை வரலாற்றின் குறிப்புகளை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் முன்வைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
-
Economy பயணிகளுக்கும் படுத்து உறங்கும் வசதி-Air New Zealand அறிவிப்பு
16/04/2026 Duración: 02minநீண்ட தூர விமானப் பயணங்களில் economy வகுப்பு பயணிகளும் படுத்து உறங்கும் வாய்ப்பினை வழங்கும் புதிய திட்டத்தை Air New Zealand அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.