Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு
22/01/2026 Duración: 06minகிரீன்லாந்து விவகாரம், சிரியாவில் பின்வாங்கும் குர்து படையினர், மொசாம்பிக்கில் கடும் மழை, பாகிஸ்தானில் தீ விபத்து; கியூப அரசை அகற்ற அமெரிக்கா திட்டமா? உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
உலகில் மிகவும் பாதுகாப்பான விமான சேவை எது தெரியுமா?
22/01/2026 Duración: 02min2026ஆம் ஆண்டிற்கான உலகின் மிகப் பாதுகாப்பான 25 விமான நிறுவனங்களின் பட்டியலை AirlineRatings.com வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
-
'பெற்றோர் குழந்தைகளுடன் தமிழில் பேசவேண்டும்'
22/01/2026 Duración: 10minகனடாவில் வாழும் எழுத்தாளர், வானொலி ஒலிபரப்பாளர், வாழ்வியல் மற்றும் பயணக் கட்டுரையாளர், துறையூரான் என்ற புனைபெயர் கொண்ட சின்னையா சிவநேசன் அவர்கள் 2014ஆம் ஆண்டு சிட்னி வந்திருந்த வேளை, அவரை SBS ஒலிபரப்புக்கூடத்தில் வைத்து நேர்கண்டவர் குலசேகரம் சஞ்சயன். இது ஒரு மறு ஒலிபரப்பு
-
தொட்டிகளில் காய்கறிகள் வளர்ப்பது எப்படி?
22/01/2026 Duración: 12minஅடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்கள் காய்கறிகள் பயிரிட்டு வளர்க்க விரும்பினால் தொட்டிகளில் எவ்வாறு வளர்க்கலாம்? என்னென்ன காய்கறிகள் வளர்க்கலாம் போன்ற பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்றவரும் தற்போது ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையில் பணியாற்றிவருபவருமான தர்மன் சவரிமுத்து அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
-
செய்தியின் பின்னணி: மக்கள் பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்ட சட்டம் என்ன சொல்கிறது?
22/01/2026 Duración: 09minகடந்த மாதம் ஒரு யூத விழாவில் 15 பேர் கொல்லப்பட்ட Bondi பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, புதிய துப்பாக்கி கட்டுப்பாடு மற்றும் வெறுப்பிற்கு எதிரான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இணக்கமாக வழியில் இந்த சட்டங்கள் இயற்றப்படவில்லை. Edwina Guinan மற்றும் Deborah Groarke எழுதிய விவரணங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய துப்பாக்கி கட்டுப்பாடு குறித்த புதிய சட்டங்கள் பற்றிய செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
இன்றைய செய்திகள்: 22 ஜனவரி 2026 வியாழக்கிழமை
22/01/2026 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( வியாழக்கிழமை 22/01/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
மருந்து வாங்கும் செலவு இந்த ஆண்டு முதல் குறைகிறது - எப்படி?
21/01/2026 Duración: 02min2026 முதல் Pharmaceutical Benefits Scheme (PBS) சலுகை பெற்ற மருந்துகளை வாங்கும் போது நோயாளிகள் செலுத்தும் தொகை குறைந்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
-
செய்தியின் பின்னணி: Pauline Hansonஇன் One Nation கட்சி முக்கிய எதிர்க்கட்சியாகுமா?
21/01/2026 Duración: 09minசமீபத்திய கருத்துக்கணிப்புகளில், Pauline Hanson தலைமையில் இயங்கும் One Nation கட்சி Liberal–National Coalitionஐ விட அதிகமான மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளதாக Newspoll அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
இன்றைய செய்திகள்: 21 ஜனவரி 2026, புதன்கிழமை.
21/01/2026 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 21/01/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இலங்கை: கல்வி மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்
20/01/2026 Duración: 08minஅரசினால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்தக்கோரி இலங்கையின் பல பகுதிகளிலும் பெற்றோர் ஆர்ப்பாட்டதிதில் ஈடுபட்டனர். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
Your guide to camping in Australia - ஆஸ்திரேலியாவில் camping செல்ல தயாராவது எப்படி? : ஒரு வழிகாட்டி
20/01/2026 Duración: 07minGoing camping is an incredible way to experience Australia’s great outdoors whilst also taking a break from technology and daily routines. We unpack the benefits of camping, the preparation required, the equipment you should consider taking, and how to be a considerate camper. - கடற்கரையிலிருந்து பாலைவனப் பகுதிவரை, ஆஸ்திரேலியாவின் இயற்கை அழகை அனுபவிக்க camping சிறந்த வழியாகும். இது குறித்து ஆங்கிலத்தில் Phil Tucak எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
பெர்த்தில் விளையும் மாம்பழம் ஒன்றின் எடை ஒரு கிலோ!
20/01/2026 Duración: 02minமேற்கு ஆஸ்திரேலியா பெர்த்தில் இந்த ஆண்டு மாம்பழங்கள் விளைச்சல் சாதனை அளவை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
-
தினமும் 6 லட்சம் டாலர் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பில்லியனர்கள்!
20/01/2026 Duración: 03minஆஸ்திரேலிய பில்லியனர்களின் செல்வம் கடந்த வருடம் அசாதாரண வேகத்தில் வளர்ச்சியடைந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
-
இன்றைய செய்திகள்: 20 ஜனவரி 2026 - செவ்வாய்க்கிழமை
20/01/2026 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 20/01/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
இந்த ஒரு தவறால் பலர் அதிக மின்சார கட்டணம் செலுத்தக்கூடும்!
19/01/2026 Duración: 02minஆஸ்திரேலியாவில் பலர் அறியாமல் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான டாலர்களை மின்சார கட்டணமாக கூடுதலாக செலுத்தி வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
-
இலவச நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை பெறுவது எப்படி?
19/01/2026 Duración: 11minதேசிய நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை திட்டம் என்றால் என்ன? அதன் நோக்கம் மற்றும் இந்த பரிசோதனைக்கு யார் தகுதியானவர்கள்? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் சிட்னியில் குடும்ப மருத்துவராக பணியாற்றும் Dr ராஜேஷ் கண்ணன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
-
கடும் சூடான நாட்களில், நம் சொந்தங்கள், சொத்துகள், மற்றும் செல்லப்பிராணிகளை எப்படிப் பாதுகாப்பது?
19/01/2026 Duración: 12minஅண்மைக் காலமாக, நம் நாட்டில் கடும் வெப்பநிலை கொண்ட நாட்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. உயர்ந்து வரும் வெப்பம் தணிய முன்பைவிட நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்வதும், அதனால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதும் நம்மால் உணர முடிகிறது. இதனுடன் சேர்ந்து, காட்டுத்தீ அபாயமும் கவலைக்கிடமான அளவில் உயர்ந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலைகளில், கடும் வெயிலும் காட்டுத்தீ அபாயமும் நிலவும் நாட்களில், நம் சொந்தங்களையும், சொத்துகளையும், செல்லப்பிராணிகளையும் எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த முக்கியமான தகவல்களை, தன்னார்வ தீயணைப்புப் படைவீரராகச் செயல்பட்டு வரும் கார்த்திக் தணிகைமணி அவர்களிடம் கேட்டறிகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
செய்தியின் பின்னணி : ஆஸ்திரேலியாவின் இந்த பெருநகரில் மட்டும் வீட்டு வாடகை சரிகிறது - ஏன்?
19/01/2026 Duración: 08minமெல்பனில் கடந்த 12 மாதங்களில் வீட்டு வாடகை குறைந்துள்ளது என Domain வெளியிட்டுள்ள சமீபத்தைய அறிக்கை தெரிவிக்கிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி.
-
இன்றைய செய்திகள்: 19 ஜனவரி 2026 - திங்கட்கிழமை
18/01/2026 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 19/01/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார செய்திகளின் தொகுப்பு
18/01/2026 Duración: 09minடெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கு; அல்பலா பல்கலைக்கழகத்தின் ரூ.140 கோடி சொத்து முடக்கம்; ஜனநாயகன் பட விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக பேசிய சீமான்; தமிழகத்தில் பெருகி வரும் கஞ்சா கலாச்சாரம் - இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!