Sbs Tamil - Sbs

கடும் சூடான நாட்களில், நம் சொந்தங்கள், சொத்துகள், மற்றும் செல்லப்பிராணிகளை எப்படிப் பாதுகாப்பது?

Informações:

Sinopsis

அண்மைக் காலமாக, நம் நாட்டில் கடும் வெப்பநிலை கொண்ட நாட்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. உயர்ந்து வரும் வெப்பம் தணிய முன்பைவிட நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்வதும், அதனால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதும் நம்மால் உணர முடிகிறது. இதனுடன் சேர்ந்து, காட்டுத்தீ அபாயமும் கவலைக்கிடமான அளவில் உயர்ந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலைகளில், கடும் வெயிலும் காட்டுத்தீ அபாயமும் நிலவும் நாட்களில், நம் சொந்தங்களையும், சொத்துகளையும், செல்லப்பிராணிகளையும் எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த முக்கியமான தகவல்களை, தன்னார்வ தீயணைப்புப் படைவீரராகச் செயல்பட்டு வரும் கார்த்திக் தணிகைமணி அவர்களிடம் கேட்டறிகிறார் குலசேகரம் சஞ்சயன்.