Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editor: Podcast
  • Duración: 192:20:21
  • Mas informaciones

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • அகதிகளின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் ‘SBS Les Murray’ விருது – நீங்களும் பரிந்துரைக்கலாம்

    27/01/2026 Duración: 02min

    அகதிகளின் சாதனைகளை கொண்டாடும் ‘SBS Les Murray’ விருதிற்கான பரிந்துரைகள் கோரப்படுகின்றன. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.

  • இலங்கையில் வேர்... இங்கிலாந்தில் மகுடம்! : ‘Sir’ பட்டம் பெற்ற தமிழர்

    27/01/2026 Duración: 10min

    இங்கிலாந்திலுள்ள லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் நிஷான் கனகராஜா அவர்களுக்கு, ஆண்டகை (knighthood அல்லது Sir) பட்டத்தை இந்த வருட தொடக்கத்தில் மன்னர் மூன்றாவது சார்ள்ஸ் கொடுத்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த வாரம் ஆஸ்திரேலியாவிற்கு அவர் வந்திருந்த போது, SBS கலையகத்தில் சந்தித்து குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டிருந்தார். இலங்கையில் அவரது வளர்ப்பு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் அவரது கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகள் மற்றும் ஒரு கல்வி நிறுவனத்தில் நிர்வாகியாக அவர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அவருடன் ஒரு நீண்ட நேர்காணல் செய்யும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. இரண்டு பாகங்களாகப் பதிவேறும் இந்த நேர்காணலின் நிறைவுப் பாகம் இது.

  • சாதாரண தொடக்கம்... அசாத்தியமான பயணம்: ‘Sir’ பட்டம் பெற்ற தமிழர்

    27/01/2026 Duración: 11min

    இங்கிலாந்திலுள்ள லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் நிஷான் கனகராஜா அவர்களுக்கு, ஆண்டகை (knighthood அல்லது Sir) பட்டத்தை இந்த வருட தொடக்கத்தில் மன்னர் மூன்றாவது சார்ள்ஸ் கொடுத்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த வாரம் ஆஸ்திரேலியாவிற்கு அவர் வந்திருந்த போது, SBS கலையகத்தில் சந்தித்து குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டிருந்தார். இலங்கையில் அவரது வளர்ப்பு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் அவரது கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகள் மற்றும் ஒரு கல்வி நிறுவனத்தில் நிர்வாகியாக அவர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அவருடன் ஒரு நீண்ட நேர்காணல் செய்யும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. இரண்டு பாகங்களாகப் பதிவேறும் இந்த நேர்காணலின் முதல் பாகம் இது.

  • இன்றைய செய்திகள்: 27 ஜனவரி 2026 - செவ்வாய்க்கிழமை

    27/01/2026 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 27/01/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • விக்டோரியாவில் விரைவில் பொது போக்குவரத்திற்கு myki கார்டு தேவையில்லை

    26/01/2026 Duración: 02min

    விக்டோரியாவில் $1.7 பில்லியன் Myki card மேம்பாட்டில் முக்கிய கட்டமாக contactless பயணம் மிக விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.

  • செய்தியின் பின்னணி : ஆஸ்திரேலிய டாலரின் மதிப்பு தற்போது உயர என்ன காரணம்?

    26/01/2026 Duración: 07min

    ஆஸ்திரேலிய டாலரின் மதிப்பு கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு தற்போது உயர்ந்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி.

  • What actually happened on January 26? - ஆஸ்திரேலியா தினம் – ஜனவரி 26 தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி

    26/01/2026 Duración: 09min

    January 26 is one of the most debated dates in Australia’s history. Often described as the nation’s birthday, the day marks neither the formal founding of the colony nor the creation of the Commonwealth. Instead, it reflects a layered history shaped by colonisation, political decisions, and ongoing First Nations resistance. Understanding what actually happened on January 26 reveals why the date is experienced so differently across the country. - ஜனவரி 26 — ஆஸ்திரேலியா தினமாக நாடு முழுவதும் அரசு விடுமுறையாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், அதன் வரலாறு எளிமையானது அல்ல. பலருக்கு, இது 1788ஆம் ஆண்டு First Fleet கப்பற்படை சிட்னிக்கு வந்த நாளாகக் கருதப்படுகிறது. ஆனால், பலருக்கு — குறிப்பாக பூர்வீகக்குடி சமூகத்தினருக்கு — இந்த நாள் இழப்பு, கலாச்சார சிதைவு, துன்பம் மற்றும் எதிர்ப்பின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.

  • இன்றைய செய்திகள்: 26 ஜனவரி 2026 - திங்கட்கிழமை

    26/01/2026 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 26/01/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  • இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார செய்திகளின் தொகுப்பு

    25/01/2026 Duración: 09min

    குடியரசு தினத்தை இன்று கொண்டாடும் இந்தியா; தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணியில் தினகரன்; விஜய் நடத்திய மாநாடு உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

  • தமிழ் மற்றும் இந்து சமூகங்களுக்கு சேவை: அரசின் உயரிய விருது பெறும் தமிழன்

    25/01/2026 Duración: 06min

    ஆஸ்திரேலிய அரசு வழங்கும் உயரிய விருதுகளில் ஒன்றான OAM எனப்படும் Medal of the Order of Australia என்ற விருதை (General Division) பொதுப்பிரிவில் மெல்பன் நகரில் வாழும் திரு செல்லையா நல்லையா அவர்கள் பெற்றுள்ளார். விக்டோரியா மாநிலத்தின் தமிழ் மற்றும் இந்து சமூகங்களுக்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக, இந்த மதிப்பு மிக்க பட்டத்தை ஆஸ்திரேலிய அரசு அவருக்கு வழங்கியுள்ளது. அவரது சேவைகள் மற்றும் அவரது பின்னணி குறித்து, திரு நல்லையா அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • உயர்நிலைக் கல்வி சேவை: ஆஸ்திரேலிய அரசின் உயரிய விருது பெறும் தமிழன்

    25/01/2026 Duración: 06min

    ஆஸ்திரேலிய அரசு வழங்கும் உயரிய விருதுகளில் ஒன்றான OAM எனப்படும் Medal of the Order of Australia என்ற விருதை (General Division) பொதுப்பிரிவில் மெல்பன் நகரில் வாழும் கௌரவ பேராசிரியர் செஸ்னி றொமேஷ் நாகராஜா அவர்கள் பெற்றுள்ளார். உயர்நிலைக் கல்விக்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக, இந்த மதிப்பு மிக்க பட்டத்தை ஆஸ்திரேலிய அரசு அவருக்கு வழங்கியுள்ளது. அவரது சேவைகள் மற்றும் அவரது பின்னணி குறித்து, பேராசிரியர் நாகராஜா அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • தமிழ் மற்றும் இந்திய சமூகங்களுக்கு சேவை: அரசின் உயரிய விருது பெறும் தமிழன்

    25/01/2026 Duración: 08min

    ஆஸ்திரேலிய அரசு வழங்கும் உயரிய விருதுகளில் ஒன்றான OAM எனப்படும் Medal of the Order of Australia என்ற விருதை (General Division) பொதுப்பிரிவில் பிரிஸ்பன் நகரில் வாழும் திரு பழனிச்சாமி ஓச்சத்தேவர் தேவர் அவர்கள் பெற்றுள்ளார். குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தமிழ் மற்றும் இந்திய சமூகங்களுக்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக, இந்த மதிப்பு மிக்க பட்டத்தை ஆஸ்திரேலிய அரசு அவருக்கு வழங்கியுள்ளது. அவரது சேவைகள் மற்றும் அவரது பின்னணி குறித்து, திரு பழனிச்சாமி அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • பொறியியல் மேன்மை, புதுமை, சேவை: ஆஸ்திரேலிய அரசின் உயரிய விருது பெறும் தமிழன்

    25/01/2026 Duración: 12min

    ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான AO எனப்படும் Officer of the Order of Australia என்ற கௌரவத்தை சிட்னி வாழ் பேராசிரியர் இளையதம்பி அம்பிகைராஜா அவர்கள் பெற்றுள்ளார். உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி, மின்சார பொறியியல், தொழில்நுட்ப புதுமைகள் மற்றும் ஆஸ்திரேலிய இலங்கை சமூகத்திற்கான சேவைகளுக்காக ஆஸ்திரேலிய அரசினால் இந்த கௌரவம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பேராசிரியர் இளையதம்பி அம்பிகைராஜா அவர்களுடன் அவரது சேவைகள் மற்றும் அவரது பின்னணி பற்றி உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (18 – 24 ஜனவரி 2026)

    24/01/2026 Duración: 07min

    ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (18 – 24 ஜனவரி 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.

  • இந்திய Driver Licenseஐ NSW உரிமமாக மாற்றுவதில் புதிய விதிமுறைகள்

    23/01/2026 Duración: 02min

    NSW மாநிலத்தில் இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த ஓட்டுநர் உரிமங்களை மாற்றும் விதிமுறைகளில் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.

  • ஆஸ்திரேலியாவில் இந்தியா உட்பட சில நாடுகளின் மாணவர் விசா பரிசீலனை கடுமையாகிறது!

    23/01/2026 Duración: 12min

    மாணவர் விசா விண்ணப்பங்களில் சமீப காலமாக போலியான விண்ணப்பங்கள் அதிகரித்து வருவது குறித்து அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ள நிலையில், இந்திய உட்பட சில நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மாணவர்களின் விண்ணப்ப பரிசீலனை நடைமுறையில் சில மாற்றங்கள் அறிமுகமாகியுள்ளது. இது குறித்து விளக்குகிறார் Adelaide நகரில் Arctic Tern Migration Solutions நிறுவனத்தின் நிறுவனரும் குடிவரவு முகவருமான கோவிந்தராஜ் ராஜு அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

  • “தடை செய்யப்பட்ட ஏதாவது உங்களிடம் இருக்கிறதா?” – எல்லைகளில் சுங்கம், மையத்தில் உலகம்

    23/01/2026 Duración: 11min

    உலக வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவதிலும், நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் சுங்க அதிகாரிகளின் அளப்பரிய பங்களிப்பைப் போற்றும் விதமாக ஜனவரி 26 அன்று உலகெங்கும் கொண்டாடப்படும் சர்வதேச சுங்க தினம் (International Customs Day - ICD) குறித்த சிறப்பு நிகழ்ச்சி ஒன்றைப் படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • செய்தியின் பின்னணி: வீடு, பணம், எதிர்காலம் - ஆஸ்திரேலியாவில் செல்வம் யாரின் கையில்?

    23/01/2026 Duración: 06min

    ஆஸ்திரேலியா ஒரு செல்வந்த நாடு என சொல்லப்படுகிறது. ஆனால் அந்த செல்வம் யாரிடம் உள்ளது? ஏன் ஒரு தலைமுறைக்கு வீடு எளிதாக கிடைத்தது, இன்னொரு தலைமுறைக்கு அது கனவாக மாறியது? இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • இன்றைய செய்திகள்: 23 ஜனவரி 2026 - வெள்ளிக்கிழமை

    23/01/2026 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 23/01/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள்

    22/01/2026 Duración: 08min

    சில தமிழ் கட்சிகள் இணைந்து தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் ஆவணம் ஒன்றை தயாரிக்கும் முயற்சி தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் மற்றும் இலங்கையில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள். இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

página 1 de 76