Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
இன்றைய செய்திகள்: 29 செப்டம்பர் 2025 திங்கட்கிழமை
29/09/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 29/09/2025) செய்திகள். வாசித்தவர்: செல்வி.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
29/09/2025 Duración: 08minலடாக்கில் மாநில அந்தஸ்து வழங்க கோரி போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் பலி; கரூரில் தமிழக வெற்றிக்கழகம் பிரச்சார கூட்டத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியான சம்பவம், 'திட்டமிட்ட சதி' என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
கரூர் துயரம்: Gen Z இளைஞர்களின் திரைப்பட ஈர்ப்பு குறித்த பார்வை
28/09/2025 Duración: 11minதமிழ்நாட்டில் கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரைக் கூட்டத்தின் போது 40 பேர் உயிரிழந்த சம்பவம் பல்வேறு விதமான வாதப் பிரதிவாதங்களை தமிழ்நாட்டில் உருவாகியிருக்கிறது. தமிழக அரசியலைக் கவனித்து வரும் பேராசிரியர் கிளாட்ஸ்டன் சேவியர் Gen Z இளைஞர்களின் அரசியல் ஈடுபாடு, ரசிக மனப்பான்மை, நடிகர்களாக இருந்து அரசியல் தலைவர்களாக உருவெடுத்தவர்கள் நடத்திய கூட்டங்கள் பற்றி அலசுகிறார். அவரோடு உரையாடுகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
நடிகர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் 39 பேர் பலி: பெருந்துயரத்தின் பின்னணி
28/09/2025 Duración: 06minதமிழ்நாட்டில் கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 39 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இச்சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கியிருக்கிறது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (21 – 27 செப்டம்பர் 2025)
26/09/2025 Duración: 05minஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (21 – 27 செப்டம்பர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 27 செப்டம்பர் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
செய்தியின் பின்னணி : சர்வதேச மாணவர்கள் சேர்க்கையில் வீழ்ச்சி? ஏன்?
26/09/2025 Duración: 08minஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை மிகுந்த வீழ்ச்சியடைந்துள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன. இது நாட்டின் பொருளாதாரத்துக்கும் கல்வித் துறைக்கும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குபவர் செல்வி.
-
பதற்றம்: காரணிகளும் தீர்வுகளும் நூல் வெளியீடு
26/09/2025 Duración: 09minமெல்பனைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் மற்றும் எழுத்தாளர் பிரின்ஸ் கென்னட் அவர்களது இரண்டாவது நூல் வெளியீட்டு விழா செப்டம்பர் 27 சனிக்கிழமை நடைபெறுகிறது. இதுதொடர்பில் அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 26 செப்டம்பர் 2025 வெள்ளிக்கிழமை
26/09/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 26/09/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள்
26/09/2025 Duración: 08minஅதிபர் அனுரகுமார திசநாயக்க பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. மேலும் மன்னார் காற்றாலை, திருகோணமலை விவசாய மக்களின் தொடரும் போராட்டம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு
25/09/2025 Duración: 08minகாசா மீது தொடரும் தாக்குதல்கள்; பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த முக்கிய நாடுகள்; டென்மார்க்கில் ட்ரோன் ஊடுருவல்கள் முயற்சி: ரஷ்ய தலையீடா?; அமெரிக்கா: H1B விசா கட்டண உயர்வு; நாடு திரும்பிய 10 லட்சம் சிரிய அகதிகள்; ஆப்கானிஸ்தானில் விமானத்தளத்தை திரும்ப பெற முயற்சிக்கும் அமெரிக்கா; ரகாசா புயல் பாதிப்பு உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
அரசு அலுவலகங்களுக்கு தொந்தரவு அழைப்புகளை மேற்கொண்ட நபருக்கு சிறைத்தண்டனை
25/09/2025 Duración: 02min1100-க்கும் மேற்பட்ட தொந்தரவு அழைப்புகளை மேற்கொண்ட நபருக்கு மேற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
செய்தியின் பின்னணி: குடியேற்றவாசி & அகதிகளுக்கு எதிர்ப்பு அதிகரிக்க என்ன காரணம்?
25/09/2025 Duración: 10minஐரோப்பிய நாடுகளில் குடியேற்றவாசிகளுக்கும், அகதிகளுக்கும் எதிராக எதிர்ப்பு போராட்டங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த எதிர்ப்பு மனநிலை உயர என்ன காரணங்கள்? இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
-
கற்றாழையின் மருத்துவ பயன்கள்!!
25/09/2025 Duración: 09minஇயற்கையின் கொடைகள் பல, அவற்றுள் ஒன்று கற்றாழை. இயற்கையாக வளரும் கற்றாழையில் பல மருத்துவக் குணங்கள் உள்ளன என்றும் எப்படி கற்றாழையை பயன்படுத்த வேண்டும் என்றும் விளக்குகிறார் சித்த வைத்தியர் டாக்டர் செல்வி மணி. அவரோடு உரையாடுகிறார் செல்வி.
-
இன்றைய செய்திகள்: 25 செப்டம்பர் 2025 வியாழக்கிழமை
25/09/2025 Duración: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 25/09/2025) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.
-
இசையமைப்பாளர்களே எல்லா பாடல்களையும் பாட வேண்டியதில்லை - தேவன் ஏகாம்பரம்
24/09/2025 Duración: 22minதிரைப்பட பின்னணி பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட தேவன் ஏகாம்பரம் அவர்கள் அண்மையில் மெல்பன் வருகை தந்திருந்தார். அவரை SBS மெல்பன் கலையகத்தில் சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
குழந்தைகளுக்கான கார் இருக்கை பயன்படுத்தும் போது தவிர்க்க வேண்டிய தவறுகள்!
24/09/2025 Duración: 11minகுழந்தைகளுக்கான கார் இருக்கை (Child car seat) பயன்படுத்துவது ஏன் அவசியம்? அதனை சரியாக பொருத்துவது எப்படி? குழந்தைகளுக்கான கார் சீட் வாங்கும்போது பெற்றோர் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் என்னென்ன? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் NSW Blacktown-இல் 18 ஆண்டுகளாக Supreme Driving School நடத்தி வரும் சிவகுருநாதன் ஶ்ரீகுமார். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
-
இன்றைய செய்திகள்: 24 செப்டம்பர் 2025 புதன்கிழமை
24/09/2025 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 24/09/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இலங்கை: சிக்கலான கச்சத்தீவு
24/09/2025 Duración: 07minஇலங்கை - இந்திய நாடுகளுக்கிடையே காணப்படும் இலங்கைக்குச் சொந்தமான கச்சத்தீவை மீளப்பெறுமாறு தமிழக அரசியல்வாதிகள் தெரிவித்துவரும் நிலையில், அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
மெல்பன் தொழிற்சாலை விபத்தில் இந்திய மாணவர் பலி
23/09/2025 Duración: 02minமெல்பன் வடக்கிலுள்ள recycling plantஇல் இடம்பெற்ற விபத்தில் இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
அமெரிக்க work visa கட்டணம் 150,000 டொலர்களாக உயர்வு: பிந்திய தகவல்கள்
23/09/2025 Duración: 02minஅமெரிக்காவின் H-1B விசா கட்டணம் 100,000 அமெரிக்க டொலர்கள் அதாவது 150,000 ஆஸ்திரேலிய டொலர்களாக உயர்த்தப்பட்டமை தொடர்பாக வெள்ளை மாளிகை முக்கிய விளக்கம் வழங்கியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.