Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
இன்றைய செய்திகள்: 18 செப்டம்பர் 2025 வியாழக்கிழமை
18/09/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 18/09/2025) செய்திகள். வாசித்தவர்: செல்வி.
-
'Ambition gap': Why most people believe they'd step in to stop hate - but don't - வெறுப்பு சம்பவத்தை தடுக்க ஆசைப்பட்டாலும், நடைமுறையில் அதை செய்வதில்லை - ஏன்?
17/09/2025 Duración: 07minAaron says he made a "snap decision" to intervene when he witnessed racism. But many people say they don't know what to do if they see hate or harassment. - நீங்கள் எப்போதாவது துன்புறுத்தல் அல்லது வெறுப்பு சம்பவத்தை கண்டதுண்டா? அதற்கு எதிராகக் குரல் கொடுத்தீர்களா, இல்லை அமைதியாக நின்றீர்களா?
-
Centrelink கொடுப்பனவு தொகை அதிகரிப்பு: யாரெல்லாம் பெறமுடியும்?
17/09/2025 Duración: 02minCentrelink கொடுப்பனவு பெறுபவர்களில் குறிப்பிட்ட சில பிரிவினருக்கான உதவித்தொகை, செப்டம்பர் 20 முதல் அதிகரிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்ட பழங்கள், காய்கறிகள் – சாப்பிடுவது பாதுகாப்பானதா?
17/09/2025 Duración: 12minபழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும் பூச்சிக்கொல்லி (pesticide) மருந்துகளால் ஏற்படும் ஆபத்துகள், அதன் தாக்கத்தை குறைக்குக் எளிய வழிகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டில் உள்ள சமீபத்திய விதிமுறைகள் அல்லது கண்காணிப்பு நடைமுறைகள் குறித்து விரிவாக உரையாடுகிறார் பெர்த் நகரில் Food Technologist-ஆக பணியாற்றும் ஜனனி சிவமைந்தன். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
-
செய்தியின் பின்னணி: கழிவறையிலும் கைபேசி பயன்படுத்துபவரா நீங்கள்? எச்சரிக்கை!
17/09/2025 Duración: 06minகழிவறையில் இருக்கும்போது உங்கள் கைபேசியைப் பயன்படுத்துவது மூலநோய்க்கான வாய்ப்பு அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என புதிய ஆய்வு முடிவு கூறுகின்றது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 17செப்டம்பர் 2025 புதன்கிழமை
17/09/2025 Duración: 02minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 17/09/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இலங்கை: தொடரும் கால்நடைப் பண்ணையாளர்களின் போராட்டம்
16/09/2025 Duración: 06minகால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களில் அத்துமீறிய குடியேற்றங்களையும் விவசாய நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தக் கோரி இரு வருடங்களாக மட்டக்களப்பில் கால்நடைப் பண்ணையாளர்கள் போராட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் "இனிய இலக்கிய சந்திப்பு"
16/09/2025 Duración: 07minதமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் "இனிய இலக்கிய சந்திப்பு" செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி சிட்னி - Wentworthville எனும் நகரில் நடைபெறுகிறது. இது குறித்து கலந்துரையாடுகின்றனர் இந்த அமைப்பின் தலைவர் அனகன்பாபு, செயலர் கர்ணன் மற்றும் இந்த இலக்கிய விழாவில் சிறப்புரை நிகழ்த்தவிருக்கும் சிதம்பரபாரதி ஆகியோர். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.
-
பிரதமரின் Marrickville தேர்தல் அலுவலகம் மூடப்பட்டது- காரணம் என்ன?
16/09/2025 Duración: 02min30 ஆண்டுகளுக்கும் மேலாக சிட்னியின் உள்-மேற்கில் இயங்கிவந்த பிரதமர் Anthony Albaneseயின் தேர்தல் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
புதிதாக இரண்டு விடுமுறை நாட்களைப் பெறவுள்ள ஆஸ்திரேலிய மாநிலம்!
16/09/2025 Duración: 02minமேற்கு ஆஸ்திரேலியர்களுக்கு புதிதாக இரண்டு விடுமுறை நாட்கள் கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 16 செப்டம்பர் 2025 செவ்வாய்க்கிழமை
16/09/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 16/09/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
உபயோகித்த துணிகளை சேகரித்து உலக சாதனை!
15/09/2025 Duración: 10minதுபாயில் பயன்படுத்திய துணிகளை சேகரித்து உலக சாதனை நிகழ்த்திய பணியில் தமிழ் நிறுவனம் ஒன்று ஈடுபட்டுள்ளது. துபாயில் அமீரக செம்பிறைச் சங்கம், சோப்புத்தூள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து அமீரகம் முழுவதும் உபயோகித்த துணிகளை சேகரித்து அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கும் பணியினை மேற்கொண்டது. இந்த பணியில் துபாயில் செயல்பட்டு வரும் Talent Zone இசை மற்றும் நடன மையம் பங்கேற்றுள்ளது. இது குறித்து இந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த Sanyo Daphneயுடன் ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடுகிறார் செல்வி.
-
ஆஸ்திரேலிய பாதுகாப்பு விசா விண்ணப்ப மோசடி: 7 குடிவரவு முகவர்கள் நாடுகடத்தல்
15/09/2025 Duración: 03minஆஸ்திரேலியாவில் மோசடியில் ஈடுபட்ட குடிவரவு முகவர்கள் 7 பேர் நாடுகடத்தப்படுவதாக எல்லைப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
How S Shakthidharan gathers his world in a single breath - ஒரே மூச்சில் தனது உலகை ஒன்று சேர்த்த எஸ். சக்திதரனின் கதை
15/09/2025 Duración: 15minWriter and playwright S. Sakthitharan’s newly published book Gather Up Your World in One Long Breath has already provoked thoughtful reflection among readers. In this interview with Kulasegaram Sanchayan, he shares his insights into the book’s origins, the stories it weaves, and the wider social contexts they explore. - எழுத்தாளர் மற்றும் நாடகாசிரியர் எஸ். சக்திதரன் சமீபத்தில் வெளியிட்டுள்ள (ஒரு நீண்ட மூச்சில் உங்கள் உலகத்தை ஒன்று திரட்டுங்கள் என்று பொருள்படும்) ‘Gather up your world in one long breath’ என்ற தலைப்பிலான புத்தகம் வாசகர்களிடையே ஆழ்ந்த சிந்தனைகளைத் தூண்டியுள்ளது. இந்த புத்தகத்தின் தோற்றம், அதில் சொல்லப்படும் கதைகள், மற்றும் அவற்றின் பரந்த சமூகப் பின்னணிகள் குறித்து அவர் பகிர்ந்த சிந்தனைகளைக் கேட்கும் வாய்ப்பை உங்களுக்கு இந்த நேர்காணல் வழங்குகிறது. தமிழ் மொழியை சரளமாகப் பேசத் தெரியாத சக்திதரனின் பதில்களின் சுருக்கத்தையும் தமிழில் தருகிறார் இந்த நேர்காணலை செய்துள்ள குலசேகரம் சஞ்சயன்.
-
இன்றைய செய்திகள்: 15 செப்டம்பர் 2025 திங்கட்கிழமை
15/09/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 15/09/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
செய்தியின் பின்னணி : ஆஸ்திரேலியாவில் வார இறுதியில் ஏன் இத்தனை ஆர்ப்பாட்டங்கள்!
15/09/2025 Duración: 07minவார இறுதியில் நாட்டின் அனைத்து தலைநகரங்கள் மற்றும் சில பிராந்திய பகுதிகளில், பல்வேறு கருத்துக்களை முன்வைக்கும் இரு மாறுபட்ட குழுக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
14/09/2025 Duración: 09minகடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடைபெற்றதாக பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைக்கும் எதிர்க்கட்சிகள்; 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50' - தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா; திருச்சியில் பிரச்சார பயணத்தை தொடங்கிய த.வெ.க. தலைவர் விஜய் - லட்சக்கணக்கானோர் பங்கேற்பு - தமிழக அரசியலில் அதிர்வு அலைகள்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
ஆஸ்திரேலியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற Papua New Guineaக்கு நாளை வயது 50!
14/09/2025 Duración: 13minஆஸ்திரேலியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற Papua New Guinea நாடு தனது 50ஆவது சுதந்திர தினத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (16 September 2025) கொண்டாடுகிறது. அந்த நாடு எப்படி சுதந்திரம் பெற்றது, அது இன்று எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்று விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
-
இந்த வார செய்திகள்: ஆஸ்திரேலியா & உலகம்
13/09/2025 Duración: 05minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (7 – 13 செப்டம்பர் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 13 செப்டம்பர் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
ஆஸ்திரேலியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு காரணமாகும் முக்கிய உயிரினம் எது
12/09/2025 Duración: 02minஆஸ்திரேலியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு காரணமாகும் உயிரினங்கள் எவை என்ற புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.