Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editor: Podcast
  • Duración: 150:17:16
  • Mas informaciones

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

    19/05/2025 Duración: 09min

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு தெரியப்படுத்த அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி தூதுக்குழு 22ம் தேதி முதல் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது; டாஸ்மாக் முறைகேடு - தமிழகம் முழுவதும் அமலாக்கத்துறை சோதனை; உச்சகட்ட உட்கட்சி மோதலில் பாமக; பாஜக மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்குமா? இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  • உடல் உறுப்பு தானம் செய்வதும், அதற்காக பதிவு செய்வதும் ஏன் அவசியம்?

    19/05/2025 Duración: 12min

    நமது குடும்பத்தில் அல்லது நமக்கு தெரிந்தவர்களுக்கு உடல் உறுப்பு தேவைப்படும்போது மட்டுமே உறுப்பு தானத்தின் அவசியம் பற்றி நமக்கு தெரியவரக்கூடும். பிற சமூகங்களோடு ஒப்பிட்டால் நமது சமூகத்தில் உடல் உறுப்பு தானம் செய்யா தங்களை பதிவு செய்கின்றவர்கள் மிகவும் குறைவு என்கின்றனர் மருத்துவர் ராமநாதன் லஷ்மணன் (HoD & Sr VMO Intensive Care unit – Campbelltown Hospital, ICU Senior Staff specialist – Fairfield Hospital ICU Senior Staff specialist - Liverpool Hospital, Executive Clinical Director – Fairfield Hospital Donation Medical Specialist SWSLHD, Course Director – Liverpool Hospital ARC ALS courses Conjoint Sr Lecturer – UNSW & WSU) மற்றும் செந்தில் ராமலிங்கம் (Member, Indian Advisory Committee – "We Care" Project) ஆகியோர். உடல் உறுப்பு தானம் குறித்து விளக்கும் அவர்கள், உடல் உறுப்பு தானம் தருவதற்கு ஒருவர் எப்படி தங்களை பதிவு செய்யவேண்டும் என்றும் விளக்குகின்றனர்.

  • ஆஸ்திரேலியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுசரிக்கப்பட்டன!

    19/05/2025 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 19/05/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு

    16/05/2025 Duración: 05min

    ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (11 மே – 17 மே 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 17 மே 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

  • ஆஸ்திரேலியா முழுவதும் தட்டம்மை(Measles) தொற்று அதிகரிப்பு!

    16/05/2025 Duración: 02min

    நாடு முழுவதும் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு Measles-தட்டம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • How to avoid romance scams in Australia - ஆஸ்திரேலியாவில் காதலின் பெயரால் இடம்பெறும் மோசடிகளைத் தவிர்ப்பது எப்படி?

    16/05/2025 Duración: 10min

    Last year alone, over 3,200 romance scams were reported by Australians, resulting in losses of more than 23 million dollars. Three experts explain how scammers operate, the red flags to watch for, and what to do if you’re the victim of a romance scam. - Romance scam-காதல் மோசடி செய்பவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் மற்றும் இத்தகைய மோசடிக்கு பலியாகிவிட்டால் என்ன செய்வது என்பது தொடர்பில் Audrey Bourget ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இருபதாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நர்த்தனாலயா நாட்டியப்பள்ளி!

    16/05/2025 Duración: 12min

    பெர்த்திலுள்ள நர்த்தனாலயா நாட்டியப்பள்ளி 20வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இதுதொடர்பில் அப்பள்ளியின் நிறுவனர் சோபனா கோபு ஐயர் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்

    16/05/2025 Duración: 08min

    இலங்கையின் மத்திய மலைநாட்டு பகுதியில் பேருந்து விபத்தொன்றில் 24 பேர் உயிரிழப்பு; மக்கள் விடுதலை முன்னணி கடந்து வந்த 60 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் நாம் வஞ்சிக்கப்பட்டோம் என அதிபர் அநுரகுமார திசநாயக்க தெரிவித்திருப்பது; உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது குறித்து தமிழ் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • கிரீன்ஸ் கட்சியின் புதிய தலைவராக செனட்டர் Larissa Waters தேர்ந்தெடுக்கப்பட்டார்!

    16/05/2025 Duración: 05min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 16/05/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு

    15/05/2025 Duración: 08min

    இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையிலான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு; மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்; துருக்கியில் ரஷ்யா- உக்ரைனுக்கு இடையிலான பேச்சுவார்த்தை; காசாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்கள்; இந்தியாவின் அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயர்களை மாற்றியுள்ள சீனா; சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் முன்னெடுப்பில் கையெழுத்திட்ட கொலாம்பியா உள்ளிட்ட உலகச் செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • தனித்துவமான தஞ்சை பெரிய கோவிலின் சிறப்புகள் என்ன? மாமன்னன் ராஜராஜசோழனின் பெருமைகள் என்ன?

    15/05/2025 Duración: 09min

    தமிழ்நாட்டில் எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் அவற்றில் தனித்துவமானது தஞ்சை பெரிய கோவில்.பல சிறப்புகளைக் கொண்ட தஞ்சை பெரியகோவிலின் சிறப்பு என்ன என்பதையும், மாமன்னன் ராஜராஜசோழனின் பெருமைகளையும் S.K.ஸ்ரீதர் அவர்கள் விளக்குகிறார். மாமன்னர் ராஜராஜசோழன் வரலாறு மற்றும் ஆய்வு மையத்தின் செயலாளர் S.K.ஸ்ரீதர் ஆவார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

  • அமெரிக்க-சீன வர்த்தக வரி குறைப்பு ஏன் ஆஸ்திரேலியாவுக்கு நல்ல செய்தி?

    15/05/2025 Duración: 06min

    அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையே நடந்து வரும் வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் அறிகுறிகள் தென்படுகின்றன. இரு நாடுகளும் மாறி மாறி விதித்த வர்த்தக வரிகளை தற்போது குறைத்துக்கொள்ள ஒத்துக்கொண்டுள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

  • நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்வதால் வருகின்ற பாதிப்புகள் யாவை?

    15/05/2025 Duración: 11min

    நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்வதால் நமது உடலுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்துக்கொள்வது மேலும் உடற்பற்சியால் வருகின்ற நன்மைகள் குறித்து நமது தயாரிப்பாளர் செல்வியுடன் உரையாடுகிறார் அடிலெய்டு நகரில் physiotherapist-ஆக பணிபுரிந்து வரும் திரு சிவகுமார் கோபாலகிருஷ்ணன்.

  • முதியோரில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு: தீர்வு என்ன?

    15/05/2025 Duración: 13min

    ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது முதியோர் எதிர்நோக்கும் மிகமுக்கிய பிரச்சினைகளில் ஒன்று. ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் சிக்கல்கள் எவை? இக்குறைபாட்டிற்கு தீர்வு என்ன என்பது உட்பட சில முக்கிய கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் முதியோர்நல மருத்துவ நிபுணர் மற்றும் Conjoint Senior Lecturer(School of Medicine- Western Sydney University) Dr பீட்டர் குருசுமுத்து அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலிய வரலாற்றில் முதன் முதலான உருவாக்கப்பட்ட ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது

    15/05/2025 Duración: 04min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 15 மே 2025 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

  • இவ்வருட குளிர் காலத்தில் அதிக மழை பெய்யும் வாய்ப்பு

    14/05/2025 Duración: 05min

    நாட்டின் பல பகுதிகளில், இந்த வருட குளிர் காலத்தில் அதிக மழை பெய்யும் என முன்கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் வருகிற நாட்களில் மழை மற்றும் பலத்த காற்று நிலவக்கூடும். இது பற்றிய செய்தியின் பின்னணியினைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • Victim Support Services - பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி சேவைகளை எவ்வாறு பெறுவது?

    14/05/2025 Duración: 08min

    வன்முறை அல்லது குற்றச்செயல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் Victim Support Services - பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி சேவைகளை பெறலாம். Victim Support Services என்றால் என்ன? அதற்கு தகுதியானவர்கள் யார்? அதனை எவ்வாறு அணுகுவது? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் சிட்னியில் குடும்ப நல வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் விஜி வீராசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

  • இந்த வார தமிழகம்/இந்தியா: செய்திகளின் பின்னணி

    14/05/2025 Duración: 07min

    தமிழக பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு; இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சிக்கலின் தற்போதைய நிலவரம்; கன்னியாகுமரியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மீனவர்கள் எதிர்ப்பு; ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்தும் இந்தியா உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • பிரதமர் இன்று ஜகார்த்தா புறப்படுகிறார்

    13/05/2025 Duración: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 14/05/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.

  • லிபரல் கட்சியின் முதலாவது பெண் தலைவராக வரலாறு படைக்கிறார் Sussan Ley!

    13/05/2025 Duración: 07min

    லிபரல் கட்சியின் புதிய தலைவராக Sussan Ley தெரிவுசெய்யப்பட்டதையடுத்து அக்கட்சியின் முதலாவது பெண் தலைவராக அவர் வரலாறு படைத்துள்ளார். இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

página 36 de 59