Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
NSW போக்குவரத்துத் துறையில் சுமார் 950 பணியிடங்கள் நீக்கம்
24/07/2025 Duración: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 24/07/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
Fear, vigilance and polarisation: How antisemitism is impacting Jewish Australians - SBS Examines : ஆஸ்திரேலியாவில் நிலவும் யூத விரோதம் எப்படி தாக்கம் ஏற்படுத்துகிறது?
23/07/2025 Duración: 07minMany in Australia’s Jewish community say political polarisation is fuelling a new wave of antisemitism. How are Jews responding in the face of high-profile incidents of hate? - 'வெறுப்பை புரிந்து கொள்வது' என்ற இந்த தொடரில், இன்றைய ஆஸ்திரேலியாவில் யூத விரோதத்தின் தாக்கத்தை நாம் ஆராய்கிறோம்.
-
தீர்வுகள் ஏதுமின்றி தொடரும் காணமலாக்கப்பட்டோர் பிரச்சினை
23/07/2025 Duración: 09minஇலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துவிட்டன. இருந்தபோதிலும் யுத்த காலப்பகுதியில் அதற்கு பின்னரும் வலிந்துகாணாமலாக்கப்படடோர் விவகாரத்திற்கு தீர்வு இதுவரை கிடைக்கவில்லை. இந்த பின்னணியில் வடக்கு - கிழக்கு காணாமலாக்கப்பட்டோர் உறவினர் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா அவர்களுடன் உரையாடுகிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
-
உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு எந்த இடம்?
23/07/2025 Duración: 02minவிசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்குப் பயணம் செய்யலாம் என்பதன் அடிப்படையில் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் எவை என்ற புதிய பட்டியலை Henley & Partners நிறுவனம் வெளியிட்டுள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
செம்மணியில் மீண்டும் மனித புதை குழிகள்: நியாயம் கேட்கும் குரல்கள்
23/07/2025 Duración: 16minவட இலங்கையின் அமைதியான கிராமமான செம்மணி, சமீபத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதை குழிகளால் மீண்டும் சர்வதேச ஊடகக் கவனத்தை ஈர்த்துள்ளது. 1990களின் இறுதியில் இவ்விடத்தில் முதல் முறையாக கிடைத்த புதை குழிகள், இலங்கையின் உள்நாட்டுப் போரின் அடக்கு முறைகளை உலகுக்கு வெளிச்சமிட்டிருந்தன – கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள், வரலாற்றின் இருண்ட கட்டங்கள். முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், செம்மணி மீண்டும் கவனத்துக்கு வருகிறது. இம்முறை, எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்களை பிப்ரவரி மாதம் நடந்த ஒரு கட்டுமானத் திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் கண்டுபிடித்தனர். நீதிமன்ற உத்தரவுகளின் பேரில் தொடங்கப்பட்ட அகழ்வாராய்ச்சி பணிகளில் இதுவரை 65ற்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அதில் சில பச்சிளம் குழந்தைகளுக்குரியவை – பாடசாலைப் பைகள், பொம்மைகள் போன்ற தனிப்பட்ட பொருட்களும் அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சான்றுகள், பல வருடங்களாகப் பதில்கள் இல்லாமல் காத்திருக்கின்ற காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சமூக நீதிக்காகக் கு
-
கன்பராவில் பழமையும் புதுமையும் ஒன்றிணையும் 48-வது நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்!
23/07/2025 Duración: 07minலேபர்க் கட்சி அதிக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் 48வது நாடாளுமன்ற அமர்வு நேற்று ஆரம்பமானது. இதில் சுமார் 40 அரசியல்வாதிகள் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளனர். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
50 வயதிற்கு மேற்பட்டவர்கள் வயதான தொழிலாளர்கள் - ஆய்வு முடிவு
23/07/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 23/07/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
இலங்கை அரசியலில் என்ன நடக்கிறது?
22/07/2025 Duración: 06minஇலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் செயற்பாடுகள் தொடர்பில் எதிரணி உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் பல்வேறு வகையிலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
ஆஸ்திரேலியாவில் எளிதாக வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
22/07/2025 Duración: 15minஆஸ்திரேலியாவில் புதிதாக வந்துள்ள Migrants – குடியேற்றவாசிகள் வேலை தேடத் தொடங்கும் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை, நேர்முக தேர்வுக்கு அழைப்பு வர செய்ய வேண்டியவை, Qualificationகளை - வெளிநாட்டு தகுதிகளை ஏற்கவைக்க செய்யவேண்டியவை என்று பல தகவல்களை பகிர்ந்துகொள்கிறார் Talent Acquisition Partner எனும் பணியில் எட்டு ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் ஸ்வப்னா ராகவன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
-
வாரத்தில் 4 நாள் வேலை: ஆஸ்திரேலியர்களுக்கு விரைவில் சாத்தியமாகலாம்
22/07/2025 Duración: 02minஆஸ்திரேலியர்களுக்கு குறைந்த வேலை நாட்கள் மற்றும் கூடுதல் விடுமுறைகளை வலியுறுத்தும் புதிய முயற்சியை சில தொழிற்சங்கங்கள் தொடங்கியுள்ளன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
தாக்குதலை விரிவுபடுத்தும் இஸ்ரேல்: காசா போரை முடிவுக்குக் கொண்டுவர பன்னாட்டு அழைப்பு
22/07/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 22/07/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
டாஸ்மேனிய மாநில தேர்தல்: யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள்?
21/07/2025 Duración: 07minTasmania மாநிலத்தின் Premier Jeremy Rockliff மீது ஜூன் மாதம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து மாநிலத்தில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்த தேர்தலில் அறுதியாக எந்தக் கட்சியும் வெற்றி பெறவில்லை என்று, இதுவரை வெளிவந்த முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
நாளைய நாடாளுமன்ற அமர்வில் முதல்முறையாக பங்கேற்கும் 40 புதிய உறுப்பினர்கள்!
21/07/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 21/07/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
தனி நாடு கோரும் New Caledonia வுக்கு புதிய அதிகாரங்களை பிரான்ஸ் தருவதன் பின்னணி என்ன?
21/07/2025 Duración: 11minசுதந்திர நாடாக அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துவந்த New Caledonia பிராந்தியத்திற்கு புதிய அதிகாரங்களை வழங்கப்போவதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. இந்த பின்னணியில் New Caledoniaயின் வரலாற்றையும், அது எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
20/07/2025 Duración: 09minநில மோசடி வழக்கில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவின் ரூ.37 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி; புதிய சர்ச்சையில் சீமான் - பெண்களை இழிவாக பேசி வருவதாக இந்திய மாதர் தேசிய சம்மேளனம் புகார்; காமராஜர் குறித்து திமுக எம்.பி. திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு - வலுக்கும் கண்டனங்கள்; - இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு
19/07/2025 Duración: 05minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (13 – 19 ஜூலை 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 19 ஜூலை 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
வருமான வரம்பு உயர்த்தப்படுவதால் Centrelink சலுகைபெற பலர் தகுதிபெறுவர்!
18/07/2025 Duración: 03minஆஸ்திரேலியாவில் முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான சொத்து மற்றும் வருமான வரம்பு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
காசாவின் ஒரே கத்தோலிக்க தேவாலயம் மீது இஸ்ரேலின் தாக்குதலில் மூன்று பேர் மரணம்
18/07/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 18/07/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
What is a Justice of the Peace? When do you need one? - உங்கள் ஆவணங்களை உறுதிப்படுத்துவதற்கு JP ஒருவரைக் கண்டுபிடிப்பது எப்படி?
18/07/2025 Duración: 09minAt some stage you will probably need help from a Justice of the Peace. It may be to prove your identity, to make an insurance claim or to certify copies of your legal documents in your language. JPs are trained volunteers who play a crucial role in the community by helping maintain the integrity of our legal system. So what exactly does a JP do and where can we find one when we need their services? - ஆஸ்திரேலியாவில் ஒரு Justice of the Peace- JPயின் பணிகள் எவை? உங்களுக்கு அவர்களின் சேவைகள் தேவைப்படும்போது ஒருவரை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது தொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்
-
Debit & credit cardக்கு நம்மிடமிருந்து கட்டணம் வசூலிப்பதை ரத்துசெய்ய RBA நடவடிக்கை!
18/07/2025 Duración: 08minஆஸ்திரேலியாவில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பரிமாற்றங்களுக்கு வணிகர்கள் விதிக்கும் surcharge கூடுதல் கட்டணங்களை நீக்க வேண்டும் என்ற முக்கியமான பரிந்துரையை ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி RBA சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.