Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
07/12/2025 Duración: 09minகோவா இரவு விடுதியில் நேரிட்ட தீ விபத்தில் 25 பேர் பலி; இந்தியாவில் எகிறும் விமான டிக்கெட் கட்டணம்! விமான கட்டணங்களுக்கு உச்சவரம்பு நிர்ணயம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதில் சர்ச்சை - தமிழக அரசியலிலும் பெரும் அதிர்வு அலைகள்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (30 நவம்பர் – 6 டிசம்பர் 2025)
05/12/2025 Duración: 05minஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (30 நவம்பர் – 6 டிசம்பர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: செல்வி.
-
படகுமூலம் மேற்கு ஆஸ்திரேலியாவை வந்தடைந்த ஆண்கள் குழு!
05/12/2025 Duración: 02minபடகுமூலம் வந்த சிலர் மேற்கு ஆஸ்திரேலியாவின் வடக்கேயுள்ள தொலைதூர பிராந்தியத்திற்குள் ரகசியமாக நுழைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
MiniPod: To shout | Words we use - MiniPod: To shout | Words we use
05/12/2025 Duración: 03minLearn a new phrase and make your English sound more natural and interesting. Words We Use is a bilingual series that helps you understand idioms like 'to shout'. - ஒரு புதிய சொற்றொடரை கற்று, உங்கள் ஆங்கிலம் மேலும் இயல்பாகவும் புதுமையாகவும் ஒலிக்கச் செய்யுங்கள். ‘Words We Use’ என்பது 'to shout' போன்ற சொற்பிரயோகங்களை நீங்கள் எளிதில் புரிந்துகொள்ள உதவும் இருமொழி தொடர் நிகழ்ச்சியாகும்.
-
மறைந்த முதுபெரும் தயாரிப்பாளர் AVM சரவணன் வழங்கிய நேர்முகம்!
05/12/2025 Duración: 24minதமிழ் திரையுலகில் பல வெற்றி திரைப்படங்களை தயாரித்த ஏவிஎம் நிறுவனத்தின் முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் அவர்கள் டிசம்பர் 4 அன்று காலமானார். அவருக்கு வயது 86. அவர் கடந்த 2015ம் ஆண்டு SBS தமிழ் ஒலிபரப்புக்கு வழங்கிய நேர்முகத்தின் மறுபதிவு இது. அவரோடு உரையாடியவர் றேனுகா துரைசிங்கம்
-
'ஆரோக்கிய உணவுடன் இதய நலனுக்கு நேர்மறை எண்ணங்கள் அவசியம்'
05/12/2025 Duración: 16minஆஸ்திரேலியா வருகை தரவுள்ள சென்னையை சேர்ந்த பிரபல இதய நல மருத்துவரும் இதய நலன் குறித்து பல புத்தகங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ள பேராசிரியர் டாக்டர் V. சொக்கலிங்கம் அவர்கள் இதய நலன் குறித்து குறிப்பாக நேர்மறை எண்ணங்கள் நமது இதய நலனுக்கு எவ்வளவு முக்கியம் மற்றும் அவரின் ஆஸ்திரேலியா பயணம் குறித்து உரையாடுகிறார். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
-
செய்தியின் பின்னணி: வீட்டு விலையுயர்வு - பயனின்றிப் போன வட்டி வீத வீழ்ச்சிகள்
05/12/2025 Duración: 07minநாட்டில் வீட்டு விலைகள் வேகமாக உயர்வதால், சமீபத்திய மூன்று வட்டி வீத வீழ்ச்சிகளால் ஏற்பட்ட நன்மைகள் புதிய வீடுகளை வாங்குபவர்களுக்கு எட்டவில்லை என வீட்டு விலைகள் பற்றி வெளியான புதிய தரவுகள் காட்டுகின்றன. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இன்றைய செய்திகள்: 05 டிசம்பர் 2025 - வெள்ளிக்கிழமை
05/12/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 05/12/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
இலங்கை: இந்த வார முக்கிய செய்தி
05/12/2025 Duración: 08minஇலங்கையிலுள்ள 25 மாவட்டங்களில் 22 மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுளதாக அரசு அறிவித்துள்ள நிலையில். உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமதுஇலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு
04/12/2025 Duración: 07minரஷ்யா- உக்ரைன் அமைதி திட்டம்; காசா நிலை; லெபனான் - இஸ்ரேல் பேச்சுவார்த்தை; அமெரிக்கா- வெனிசுலா இடையிலான உரையாடல்; வடகொரியா பற்றிய தென்கொரிய அதிபரின் கருத்து; அமெரிக்காவில் காங்கோ, ருவாண்டா நாட்டுத் தலைவர்கள் உள்ளிட்ட உலகச்செய்திகளின் முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
ஆஸ்திரேலியாவுக்கு ஆடு வந்த கதையும், இப்போதுள்ள நிலையும்!
04/12/2025 Duración: 10minஆடு ஆஸ்திரேலிய மண் சார்ந்த விலங்கு அல்ல. ஆடு, தாவரங்களை அழிக்கிறது என்பதால் ஆடுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான ஆடுகளை சுட்டுத்தள்ள அரசு திட்டங்களை வகுக்கின்றன. இந்த நாட்டுக்குள் ஆடு எப்படி வந்தது அல்லது ஏன் வந்தது, விருந்தாளியாக வந்த ஆடு எப்படி வில்லனானது என்ற தகவல்களை தொகுத்தளிக்கிறார் றைசெல்.
-
துளசியின் மருத்துவ குணங்கள்!
04/12/2025 Duración: 08minதுளசியின் மருத்துவ நலன்கள் மற்றும் அதனை உபயோகமாக பயன்படுத்தும் முறைகள் போன்றவற்றை நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார் சித்த வைத்தியர் டாக்டர் செல்வி மணி அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு செல்வி.
-
20 ஆண்டுகளுக்கு முன் தவறாக வசூலித்த பணம் — திருப்பி செலுத்தும் Services Australia!
04/12/2025 Duración: 02minஆஸ்திரேலியாவில் சுமார் 44,000 பேருக்கு சென்ட்ரலிங்க் மூலம் தவறாக வசூலிக்கப்பட்ட பணத்தை திருப்பி வழங்க வேண்டும் என்று Services Australia தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
-
செய்தியின் பின்னணி : உடல் பருமன் சிகிச்சை - WHOவின் முதல் மருந்து பரிந்துரைகள்
04/12/2025 Duración: 07minஉடல் பருமன் சிகிச்சைக்கு முதன்முறையாக மருந்து பரிந்துரைகளை உலக சுகாதார நிறுவனம் WHO வெளியிட்டுள்ளது. இது வரலாற்றுச் சிறப்பு மிக்க வழிகாட்டுதல் எனக் கூறப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி.
-
ஆஸ்திரேலியாவின் தேசிய புற்றுநோய் அமைப்பின் தலைவராகியுள்ள தமிழன்
04/12/2025 Duración: 14minClinical Oncology Society of Australia ( COSA) எனும் தேசிய அமைப்பின் தலைவராக பேராசிரியர் சபே சபேசன் அவர்கள் தெரிவாகியுள்ளார். Townsville cancer centre இயக்குனராகவும், James Cook (JCU) பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் எனப் பன்முகம் கொண்ட தமிழரான Dr சபே சபேசன் அவர்கள் தலைமைத்துவப் பண்புகள், அவரின் வேலைத்திட்டங்கள் மற்றும் பல விடயங்கள் பற்றி எம்முடன் பகிர்ந்துகொண்டார். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன். Professor Sabe Sabesan has been elected as the President of the Clinical Oncology Society of Australia (COSA). A distinguished Tamil Australian, he also serves as the Director of the Townsville Cancer Centre and as a Professor at James Cook University (JCU). In this interview, Professor Sabesan shares his insights on leadership, his strategic priorities, and various aspects of his professional journey. The conversation was conducted by Praba Maheswaran.
-
இன்றைய செய்திகள்: 04 டிசம்பர் 2025 வியாழக்கிழமை
04/12/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 04/12/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
போலி Wi-Fi உருவாக்கி தகவல்களை திருடிய நபருக்கு சிறைத் தண்டனை!
03/12/2025 Duración: 02min‘ஈவில் ட்வின்’ எனப்படும் போலி வைஃபை வலையமைப்புகளை உருவாக்கி தனிப்பட்ட தகவல்களை திருடிய மேற்கு ஆஸ்திரேலிய நபருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
-
செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலியாவின் குடிவரவு தடுப்பு முறை தொடர்பில் ஐ.நா ஆய்வு
03/12/2025 Duración: 06minஆஸ்திரேலியாவின் குடிவரவு தடுப்பு முறைமை இந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பணிக்குழுவொன்றின் தீவிர ஆய்வுக்குட்படுகிறது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். ஆங்கில மூலம்: SBS Newsயின் Gabrielle Katanasho.
-
இன்றைய செய்திகள்: 03 டிசம்பர் 2025 புதன்கிழமை
03/12/2025 Duración: 02minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 03/12/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
-
Managing Cholesterol: Key Insights from a Specialist - கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு: புதிய ஊசி மூலமான மருந்துகள்
02/12/2025 Duración: 10minCholesterol plays an essential role in our health, but when its balance is disrupted, it can lead to various health issues. We are speaking with a Consultant Cardiologist, staff specialist in General Medicine Dr Victor D Joseph to gain important insights about cholesterol and its impact on our wellbeing. The interview is conducted by Praba Maheswaran. - கொலஸ்ட்ரால் என்பது நமது உடல்நலத்தில் முக்கிய பங்கு வகிப்பதோடு, சரியான சமநிலை குலைந்தால் பல நோய்களுக்கு காரணமாகவும் முடியும். இதன் பின்னணியில், இதயநோய் நிபுணர் (Consultant Cardiologist), staff specialist in General Medicine வைத்தியர் விக்டர் ஜோசப் அவர்களுடன் உரையாடுகிறோம். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன். Cholesterol plays an essential role in our health, but when its balance is disrupted, it can lead to various health issues. We are speaking with a Consultant Cardiologist, staff specialist in General Medicine Dr Victor D Joseph to gain important insights about cholesterol and its impact on our wellbeing. The interview is conducted by Praba Maheswaran.