Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள்
11/12/2025 Duración: 08minமீண்டும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவது தொடர்பில் தமிழ் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் கவனயீர்ப்பு போராட்டம். இவைகள் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு
11/12/2025 Duración: 06minவெனிசுலா எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா; உக்ரைன் - ரஷ்யா போர் சூழல்; புயல் பாதிப்புகளில் சிக்கியுள்ள காசா; வங்கதேசத்தில் தேர்தல்; பல்கேரியாவில் மக்கள் போராட்டம்: பிரதமர் ராஜினாமா; DR காங்கோவில் புதிய நகரை கைப்பற்றிய M23 ஆயுதக்குழு: 400 பேர் உயிரிழப்பு; சூடானிய போர் குற்றவாளிக்கு தண்டனை உள்ளிட்ட உலகச்செய்திகளின் முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
ஷேக்ஸ்பியர் நாடகத்திற்கு தனித்துவமான இசையால் உயிர்கொடுக்கும் அர்ஜுனன் புவீந்திரன்!
11/12/2025 Duración: 14minசேக்ஸ்பியரின் The True History of the Life and Death of King Lear & His Three Daughters என்ற நாடகம் Belvoir தயாரிப்பில் சிட்னியில் மேடையேறியுள்ளது. இந்த நாடகத்தில் இணை இசையமைப்பாளராகவும், மேடை இசைக்கலைஞராகவும் உள்ள அர்ஜுனன் புவீந்திரன் அவர்களுடனான நேர்காணல் இது. அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலியாவில் Optometrist-க்கான வேலைவாய்ப்பு எந்தளவில் உள்ளது?
11/12/2025 Duración: 13minஆஸ்திரேலியாவிலுள்ள மாணவர்கள் தமது எதிர்கால தொழில்துறையாக எதைத் தெரிவுசெய்யலாம் என்பதில் சில குழப்பங்கள் இருக்கக்கூடும். அப்படியானவர்களுக்கு உதவும் நோக்கில் சில முக்கியமான தொழில்துறைகள் தொடர்பில் நாம் நிகழ்ச்சிகளைப் படைத்துவருகிறோம். அந்தவகையில் Optometry தொடர்பில் அறிந்துகொள்வோம். Optometry சார்ந்த பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் Optometrist செந்தில் முருகப்பா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
பெயர்: மான். தொழில்: அட்டூழியம் செய்தல்
11/12/2025 Duración: 11minஆஸ்திரேலியாவில் குடியேற அழைத்து வரப்பட்ட மான் இப்போது ஒரு வேண்டா விருந்தாளி. மான் எப்படி Feral Deer அல்லது காட்டு மான் ஆனது, மான் தரும் தொல்லைகள் என்ன என்ற தகவல்களை தொகுத்தளிக்கிறார் றைசெல்.
-
செய்தியின் பின்னணி : 16 வயதிற்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
11/12/2025 Duración: 10minஆஸ்திரேலியாவின் 16 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கான சமூக ஊடகத் தடை டிசம்பர் 10 ஆம் தேதி புதன்கிழமை நடைமுறைக்கு வந்துள்ளது. SBS News-இற்காக Sam Dover ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை அடிப்படையாக கொண்டு செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
இன்றைய செய்திகள்: 11 டிசம்பர் 2025 வியாழக்கிழமை
11/12/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 11/12/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
மெல்பன்- இலங்கை இடையே நேரடி விமான சேவையை ஆரம்பிக்கிறது Jetstar!
10/12/2025 Duración: 02minஆஸ்திரேலியாவின் Jetstar விமான நிறுவனம், இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் கிளை இந்தியாவில் திறக்கப்படுகிறது!
10/12/2025 Duración: 02minUniversity of New South Wales, சிட்னியின் வெளிநாட்டு வளாகம் இந்தியாவில் திறக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
குணமடைய Stem cell (குருத்தணு) தேவைப்படும் வினோத் - நீங்களும் உதலாம்!
10/12/2025 Duración: 12minஇரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இரட்டை குழந்தைகளின் தந்தையான 46 வயதான வினோத் அவர்களுக்கு stem cell donor (குருத்தணு கொடையாளி) தேவைப்படுகிறது. வினோத் அவர்களின் உடல்நிலை குறித்தும் அவருக்கு ஏன் stem cell சிகிச்சை அவசியம் என்பது குறித்தும் அவரின் மாமனார் ராமநாதன் அவர்களுடனும் stem cell donor registryயில் பதிவு செய்வது குறித்து ஹரிணி அவர்களுடனும் உரையாடுகிறார் செல்வி.
-
இன்றைய செய்திகள்: 10 டிசம்பர் 2025 புதன்கிழமை
10/12/2025 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 10/12/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இலங்கை: இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட அனுரகுமார திசநாயக்க!
09/12/2025 Duración: 08minஅனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றதோடு மக்களையும் சந்தித்து பேசினார் இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
செய்தியின் பின்னணி: இந்திய விமான சேவை பாதிப்பு, பயணிகள் பெரும் அவதி!
09/12/2025 Duración: 07minIndiGo விமான சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக, தொடர்ந்து பல நாட்களாக இந்தியா முழுவதும் விமானசேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் பின்னணி தொடர்பில் விளக்குகிறார் தற்போது இந்தியாவிலிருக்கும் SBS தமிழ் நிறைவேற்றுத் தயாரிப்பாளர் றைசல். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
குயின்ஸ்லாந்து பெண் கொலை வழக்கில் இந்தியருக்கு ஆயுள் தண்டனை!
09/12/2025 Duración: 03minகுயின்ஸ்லாந்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்தியப்பின்னணி கொண்ட ராஜ்விந்தர்சிங்கிற்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 09 டிசம்பர் 2025 செவ்வாய்க்கிழமை
09/12/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 9/12/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
அரசின் மின் கட்டண தள்ளுபடி டிசம்பரில் முடிவிற்கு வருகிறது!
08/12/2025 Duración: 03minஆஸ்திரேலிய பெடரல் அரசின் மின் கட்டண தள்ளுபடி திட்டம் அடுத்த ஆண்டு தொடராது என்று பெடரல் அரசு அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
-
நீரிழிவைத் தடுக்க ஆஸ்திரேலியா- இந்தியா இணைந்து மேற்கொள்ளும் செயற்றிட்டம்!
08/12/2025 Duración: 13minஇந்தியா மேகாலயாவில் பூர்வீகக்குடி பின்னணிகொண்டவர்கள் வாழும் கிராமங்களில் இளைஞர்களிடையே type 2 நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயங்களை குறைக்கும் நோக்கில் Baker Heart and Diabetes Institute இந்திய சுகாதார சேவைகளுடன் இணைந்து செயல்படுகிறது. இதுதொடர்பில் மேற்கொள்ளப்படும் SHILLONG திட்டம் குறித்து விளக்குகிறார் இத்திட்டத்தின் தலைமை இணை ஆய்வாளர் Dr Felix Jebasingh அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
செய்தியின் பின்னணி : 13 ஆண்டுகளாக நிச்சயமற்ற நிலை - நிரந்திர விசா கோரும் 900 அகதிகள்
08/12/2025 Duración: 08minகிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன் படகில் ஆஸ்திரேலியா வந்த சுமார் 900 அகதி விண்ணப்பதாரர்கள் இன்னும் விசா நிச்சயமின்மையில் சிக்கித் தவிக்கின்றனர். இது குறித்து ஆங்கிலத்தில் Alexandra Jones எழுதிய செய்தியின் பின்னணியை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
இன்றைய செய்திகள்: 08 டிசம்பர் 2025 - திங்கட்கிழமை
08/12/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 08/12/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
How to plan for your child’s financial future in Australia - ஆஸ்திரேலியாவில் உங்கள் குழந்தையின் நிதி எதிர்காலத்தை எப்படி திட்டமிடுவது?
07/12/2025 Duración: 09minFinancial planning can feel stressful for any parent. When it comes to saving for your child’s future, knowing your options helps make informed decisions. And teaching your kid healthy money habits can be part of the process. - உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக சேமிப்பது மற்றும் அவர்களுக்கு நிதி மேலாண்மை குறித்து கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியம். இது குறித்து ஆங்கிலத்தில் Zoe Thomaidou எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.