Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை - இவர்கள் என்ன சொல்கிறார்கள்?
17/12/2025 Duración: 11minஆஸ்திரேலியாவின் 16 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கான சமூக ஊடகத் தடை டிசம்பர் 10 ஆம் தேதி நடைமுறைக்கு வந்துள்ளது. இது குறித்து சில பெற்றோர் மற்றும் பிள்ளைகளின் கருத்துக்களை கேட்டறிந்து விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
செய்தியின் பின்னணி : சிட்னி Bondi தாக்குதல் தொடர்பான பிந்தைய செய்திகள்
17/12/2025 Duración: 09minகடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னி Bondi கடற்கரையில் ஹனுக்கா விழாவுக்காக கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள்மீது இரண்டு துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தீவிரவாத தாக்குதல் என காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்த பிந்தைய செய்திகள் அடங்கிய செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
இன்றைய செய்திகள்: 17 டிசம்பர் 2025 புதன்கிழமை
17/12/2025 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 17/12/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இலங்கை: வடக்கு கிழக்கில் மீனவர் போராட்டம்
16/12/2025 Duración: 08minவடக்கு மற்றும் கிழக்கில் மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கைகள் அனர்த்தங்களினால் பெரும் பாதிப்படைந்துள்ளது. பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்க சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்த கோரி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இவைகள் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சியை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
Bondi தாக்குதல்: தவறாக அடையாளம் காணப்பட்டதால் அச்சத்தில் வாழும் சிட்னி நபர்!
16/12/2025 Duración: 02minBondi கடற்கரையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக தவறாக குற்றம் சாட்டப்பட்டதால் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக சிட்னி நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 16 டிசம்பர் 2025 செவ்வாய்க்கிழமை
16/12/2025 Duración: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 16/12/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
விக்டோரியாவில் வாடகைதாரர்களை பாதுகாக்க நடைமுறைக்கு வந்துள்ள புதிய சட்டம்!
15/12/2025 Duración: 10minவிக்டோரியா மாநிலத்தில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களை பாதுகாக்க கொண்டுவரப்பட்ட புதிய சட்டம் சமீபதில் நடைமுறைக்கு வந்துள்ளது. இது குறித்த பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் NewGen Consulting Australasia நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான தொழில்துறை அனுபவம் கொண்ட எமில் ராஜா அவர்கள். அவர் ஒரு முன்னோடியான தொழில்முனைவோர் மற்றும் பொருளாதார எதிர்காலவியலாளர், நவீன தொழில்நுட்பம், நிதி சேவைகள் மற்றும் வணிக மாற்றத்திற்கான தீர்வுகளை உருவாக்குவதில் முன்னிலை வகிக்கிறார். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
-
இன்னொரு பாரதி!
15/12/2025 Duración: 05minதனித்தமிழ் இயக்கத்தைப் படைத்தவர்களில் நாவலர் சோமசுந்தர பாரதியார் மிகவும் குறிப்பிடத் தகுந்தவர். நாம் பாரதி என்றழைக்கும் சுப்ரமணிய பாரதியின் நண்பர்தான் சோமசுந்தர பாரதியார். பாரதி போன்று தமிழ்நாட்டில் எட்டயபுரத்தில் பிறந்தவர்தான் சத்தியானந்த சோமசுந்தரன். அவர் எப்படி சோமசுந்தர பாரதி ஆனார்? காலத்துளி நிகழ்ச்சி வழி விளக்குகிறார் றைசெல்.
-
செய்தியின் பின்னணி: தேசத்தை உலுக்கிய சிட்னி Bondi தாக்குதல்!
15/12/2025 Duración: 06minசிட்னி Bondi கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. இத்தாக்குதல் குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
செய்தியின் பின்னணி : உயிர் காக்கும் மருத்துவ கண்டுபிடிப்புகள் தாமதமாக கிடைப்பது ஏன்?
15/12/2025 Duración: 10minஉயிர் காக்கும் மருத்துவ தொழில்நுட்பங்கள் ஆஸ்திரேலிய மருத்துவமனைகளில் பாவனைக்கு வர சுமார் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது. இது குறித்து SBS News-இற்காக ஆங்கிலத்தில் Sydney Lang தயாரித்த விவரணத்தை அடிப்படையாக கொண்டு செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
இன்றைய செய்திகள்: 15 டிசம்பர் 2025 - திங்கட்கிழமை
15/12/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 15/12/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
14/12/2025 Duración: 09minஇந்திய தலைநகர் புது டெல்லியில் காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ளதால் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன; சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் - 14 நாள் காவல்; திருப்பரங்குன்றம் தீப விவகாரம் - உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கிய இந்து அமைப்புகள்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
சிட்னி Bondi கடற்கரை தாக்குதல் தீவிரவாத சம்பவமாக அறிவிப்பு- 12 பேர் பலி, 29 பேர் காயம்
14/12/2025 Duración: 03minசிட்னியின் பிரபல Bondi கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இத்தாக்குதல் குறித்த பிந்திய செய்திகளை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
சிட்னி Bondi கடற்கரையில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் பலி, பலர் காயம்!
14/12/2025 Duración: 02minசிட்னியின் பிரபல Bondi கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
From Mabo to modern Australia: the ongoing story of native title - Native Title: மாபோ வழக்கு முதல் இன்றைய ஆஸ்திரேலியா வரை
14/12/2025 Duración: 09minAustralia is known around the world for its rich and diverse First Nations cultures. But when it comes to native title and land rights, you might still wonder what they actually mean. Discover what native title means in Australia, how it began with the Mabo Case, what the Native Title Act does, and why it matters for all Australians. - ஆஸ்திரேலியா அதன் வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட பூர்வீகக்குடி கலாச்சாரங்களுக்காக உலகம் முழுவதும் அறியப்படுகிறது. ஆனால் பூர்வீக நில உரிமை அங்கீகாரம் மற்றும் நில உரிமைகளைப் பொறுத்தவரை, அவற்றின் உண்மையான அர்த்தம் என்ன என்று பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். பூர்வீக நில உரிமை அங்கீகாரம் என்றால் என்ன? அது எப்படி வந்தது? என்பது தொடர்பில் Nikyah Hutchings ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (07 – 13 டிசம்பர் 2025)
12/12/2025 Duración: 06minஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (07–13 டிசம்பர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: செல்வி.
-
A parent’s guide to help teens adjust to social media age restrictions - சமூக ஊடகத் தடையினால் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கு பெற்றோர் எவ்வாறு உதவலாம்?
12/12/2025 Duración: 09minAustralia is restricting access to social media accounts for under-16s, and many families are wondering what it means in practice. While the rules place responsibility on tech platforms rather than young people or their parents, the changes may still create stress for teens who rely on social media to stay connected. Find out how the ban will work, why connection still matters, and how experts suggest supporting young people through the transition. - ஆஸ்திரேலியாவின் 16 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கான சமூக ஊடகத் தடை டிசம்பர் 10 ஆம் தேதி நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த மாற்றங்களைப் பற்றி இளம் வயதினருடன் எப்படி பேசலாம்? இந்த தடையினை பிள்ளைகள் புரிந்து கொண்டு அதனை சமாளிக்க பெற்றோர் அவர்களுக்கு உதவுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இது குறித்து ஆங்கிலத்தில் Veronica Lenard எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
MiniPod: Sleep on it | Words we use - MiniPod: Sleep on it | Words we use
12/12/2025 Duración: 03minLearn a new phrase and make your English sound more natural and interesting. Words We Use is a bilingual series that helps you understand idioms like 'sleep on it'. - ஒரு புதிய சொற்றொடரை கற்று, உங்கள் ஆங்கிலம் மேலும் இயல்பாகவும் புதுமையாகவும் ஒலிக்கச் செய்யுங்கள். ‘Words We Use’ என்பது 'sleep on it' போன்ற சொற்பிரயோகங்களை நீங்கள் எளிதில் புரிந்துகொள்ள உதவும் இருமொழி தொடர் நிகழ்ச்சியாகும்.
-
செய்தியின் பின்னணி: விடுமுறையிலும் விழிப்புடன் இருங்கள் - காட்டுத்தீ ஆபத்து
12/12/2025 Duración: 06minஅடுத்த வாரங்கள் மற்றும் மாதங்களில் காட்டுத்தீ அபாயம் மேலும் அதிகரிக்கும் நிலையில், அனைவரும் வீட்டில் இருந்தாலும் விடுமுறைக்குச் சென்றாலும் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இன்றைய செய்திகள்: 12 டிசம்பர் 2025 - வெள்ளிக்கிழமை
12/12/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 12/12/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.