Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
அரிதான வெள்ளைக் கங்காரு விற்பனைக்கு!
22/12/2025 Duración: 02minதெற்கு ஆஸ்திரேலியாவில் அரிய வகை சாம்பல் மற்றும் வெள்ளை நிற கங்காருக்கள் விற்பனைக்கு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
உங்கள் Superannuation நிதியின் பயனாளியை நியமிப்பது ஏன் முக்கியம்?
22/12/2025 Duración: 10minSuperannuation Nomination என்பது, நீங்கள் இறந்தால் உங்கள் ஓய்வூதிய நிதியை யார் பெற வேண்டும் என்பதை பதிவு செய்து வைக்கும் செயல்முறையாகும். இது குறித்த பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் நிதிதுறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட பிரிஸ்பனை சேர்ந்த ராமநாதன் கருப்பையா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
-
இன்றைய செய்திகள்: 22 டிசம்பர் 2025 - திங்கட்கிழமை
22/12/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 22/12/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
21/12/2025 Duración: 07minதமிழ்நாடு வாக்காளர் பட்டியலிலிருந்து 97 லட்சம் பேர் நீக்கம்; செவிலியர்கள் போராட்டம்; 100 நாள் வேலைத்திட்டத்துக்கு மாற்றாக மோடி அரசின் புதிய திட்டம்; நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா- ராகுல் காந்தி விடுதலையை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு உள்ளிட்ட தமிழக/இந்தியச் செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
திருப்தியான தருணங்களும், சவால்களும், ஏமாற்றங்களும் - K. Arkesh, முன்னாள் IGP
21/12/2025 Duración: 19minஇந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் காவல் துறை உயரதிகாரி (Inspector General of Police) கே. ஆர்கேஷ் அவர்கள். மிகவும் கடினமான, சவாலான பகுதிகளில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்துள்ளார். வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் காஷ்மீர் கிளர்ச்சி ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு தலைமையேற்று செயல்பட்டவர். சந்தனக் கடத்தல் வீரப்பனை தேடும் நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியவர். அவர் ஒரு கல்வியாளரும் கூட. மனிதவியல் (Anthropology) துறையில் முதுகலைப் பட்டமும், நாட்டுப்புறவியல் (Folklore) துறையில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். மெல்பனில் நடைபெற்ற Fourth International Humanists Conference யில் கலந்துகொண்ட அவரை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடியவர் றைசெல்.
-
மெல்பனில் தமிழ் அகதி ஒருவர் மரணம்: அவரது மகள் விடுக்கும் வேண்டுகோள்!
20/12/2025 Duración: 06minமெல்பனில் தமிழ் அகதி ஒருவர் மரணமடைந்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (15 – 20 டிசம்பர் 2025)
20/12/2025 Duración: 06minஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (15 – 20 டிசம்பர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
-
இந்தோனேசிய - தமிழ் இசை உலகங்களை இணைக்கும் ரோஹன்!
19/12/2025 Duración: 10minஇந்தோனேசியாவின் புகழ்பெற்ற gamelan இசை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். Gamelan மட்டுமல்ல tuba, baritone, euphonium என பல வாத்தியங்களை வாசிக்கும் திறமை கொண்டவர் மெல்பனைச் சேர்ந்த ரோஹன் ஐயர். அவரது இசைப் பயணம் தொடர்பிலும் அவரது பின்னணி தொடர்பிலும் அவர் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். மெல்பன் கலையகத்தில் அவரை சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
MiniPod: To be stuffed | Words we use - MiniPod: To be stuffed | Words we use
19/12/2025 Duración: 03minLearn a new phrase and make your English sound more natural and interesting. Words We Use is a bilingual series that helps you understand idioms like 'to be stuffed'. - ஒரு புதிய சொற்றொடரை கற்று, உங்கள் ஆங்கிலம் மேலும் இயல்பாகவும் புதுமையாகவும் ஒலிக்கச் செய்யுங்கள். ‘Words We Use’ என்பது 'to be stuffed' போன்ற சொற்பிரயோகங்களை நீங்கள் எளிதில் புரிந்துகொள்ள உதவும் இருமொழி தொடர் நிகழ்ச்சியாகும்.
-
Dating or matchmaking: How to find a partner in Australia - ஆஸ்திரேலியாவில் காதல் துணையை தேடுவது எப்படி?
19/12/2025 Duración: 10minMany newly arrived migrants in Australia seek relationships not only for romance but to regain a sense of belonging. Separation from loved ones often drives this need for connection. This episode explores how dating in Australia differs from more collectivist cultures and how newcomers can find partners. From social events and dating apps to professional matchmaking, it highlights how migrants can build confidence, connection, and safety as they find love in a new country. - ஆஸ்திரேலியாவில் குடியேறிய பிறகு காதல் துணையை தேடுபவர்கள் எப்படி தங்களின் காதல் பயணத்தை தொடங்கலாம், அதில் எதைக் கவனிக்க வேண்டும், பாதுகாப்பான மற்றும் உண்மையான முறையில் நீடித்த உறவை எவ்வாறு உருவாக்கலாம் என்பது குறித்து ஆங்கிலத்தில் Maram Ismail எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
இன்றைய செய்திகள்: 19 டிசம்பர் 2025 - வெள்ளிக்கிழமை
19/12/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 19/12/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள்
18/12/2025 Duración: 08minதம்மை பாதுகாப்பான இடங்களில் மீளவும் குடியேற்ற கோரி மக்கள் போராட்டம் மற்றும் அண்மைய அனர்த்தம் குறித்து விவாதிக்க விசேட நாடாளுமன்ற அமர்வு. இவைகள் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
செய்தியின் பின்னணி: Bondi தாக்குதலால் நாட்டில் கடுமையாக்கப்படும் சட்டங்கள்
18/12/2025 Duración: 07minBondi கடற்கரைத் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, பிரதமர் Anthony Albanese, இனவெறுப்பினைத் தூண்டும் பேச்சு, இனவன்மம், மதவன்மம் மற்றும் வன்முறையை தூண்டும் கருத்துக்களை எதிர்க்கும் வகையில், நாட்டின் சட்டங்களை மேலும் கடுமையாக்கும் புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு
18/12/2025 Duración: 08minஅமெரிக்கா- வெனிசுலா இடையே முற்றும் மோதல் போக்கு; காசா: போர் நிறுத்த மீறல்கள்; அமெரிக்கா- ரஷ்யா அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை; எகிப்து- இஸ்ரேல் இடையே இயற்கை எரிவாயு ஏற்றுமதி ஒப்பந்தம்; தைவானுக்கு 11 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுத விற்பனை: அமெரிக்காவின் அறிவிப்பு; கம்போடியா- தாய்லாந்து இடையில் மீண்டும் மோதல்; சிரியாவில் அமெரிக்க படையினர் மீது ஐஎஸ் தாக்குதல் உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் தமிழ்ப் பிரபாகரன்.
-
Bondi தாக்குதல்: சர்ச்சைக்குள்ளாகும் சஜித் அக்ரமின் இந்தியப் பின்னணி!
18/12/2025 Duración: 03minBondi கடற்கரை தாக்குதலில் தனது தந்தையுடன் இணைந்து ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நவீத் அக்ரமுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தந்தை மகன் தொடர்பிலான விவரங்களை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
செய்தியின் பின்னணி: Port Arthur படுகொலைகள் ஏன் இன்று பேசப்படுகிறது?
18/12/2025 Duración: 09minசிட்னி Bondi கடற்கரையில் 15 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்த இரண்டாவது மிகப் பெரிய படுகொலை சம்பவம் எனப்படுகிறது. 29 ஆண்டுகளுக்கு முன் தஸ்மேனிய மாநிலத்தில் இடம்பெற்ற Port Arthur படுகொலைகள் இன்று அதிகம் பேசப்படுகிறது. இந்த சம்பவம் பற்றிய விரிவான விளக்கத்தை முன்வைக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் மூத்த ஒலிபரப்பாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
-
முதியோர் எதிர்கொள்ளும் வருமான சுரண்டல் : தடுப்பது எப்படி?
18/12/2025 Duración: 12minElders Financial Abuse - முதியோர் வருமான சுரண்டல் என்றால் என்ன? இதற்கான சட்ட உதவிகளை எங்கு பெற்றுக்கொள்ளலாம்? இது போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த விவரணம். தயாரித்து முன் வைக்கிறார் செல்வி.
-
கண் தொடர்பான பிரச்சினைகளாலும் தலைவலி வரக்கூடுமா?
18/12/2025 Duración: 10minநம்மில் பலர் தலைவலியால் அடிக்கடி அவதிப்படுவோம். கண் தொடர்பான பிரச்சினைகளாலும் தலைவலி வரக்கூடுமா? விளக்கமளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்
-
இன்றைய செய்திகள்: 18 அக்டோபர் 2025 வியாழக்கிழமை
18/12/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 18/12/2025) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.
-
NSW-இல் துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் எத்தனை பேர் உள்ளனர்?
17/12/2025 Duración: 03minBondi கடற்கரை துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலையடுத்து NSW மாநிலத்தில் சட்டபூர்வமாக துப்பாக்கி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறித்து தீவிரமான விவாதம் எழுந்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.