Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
காரை சர்வீஸ் செய்வது எவ்வளவு முக்கியம்?
08/10/2025 Duración: 10minCarஐ பராமரிப்பது எப்படி மேலும் வாகனம் சம்பந்தமாக நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில முக்கியமான விடயங்கள் பற்றியும் விளக்கமளிக்கிறார் Sydney Auto Repairs இன் உரிமையாளரும் ஆட்டோ மொபைல் துறையில் 30 வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ளவருமான போல்ராஜ் அவர்கள். அவருடன் உரையாடுகிறார் செல்வி.
-
செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலியா-PNG இடையே புதிய ஒப்பந்தம்!
08/10/2025 Duración: 06min70 ஆண்டுகளில் முதன்முறையாக ஆஸ்திரேலியா பாதுகாப்பு கூட்டணி ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 08 அக்டோபர் 2025 புதன்கிழமை
08/10/2025 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 08/10/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
-
ஐ.நா. தீர்மானம்; இலங்கையின் மறுப்பும் - உலகின் பொறுப்பும்
07/10/2025 Duración: 07minஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்” எனும் தலைப்பில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
மெல்பனில் புதிய ரயில் நிலையம் திறக்கப்படுகிறது!
07/10/2025 Duración: 02minமெல்பனின் புதிய மெட்ரோ சுரங்கப்பாதையில் அமைந்துள்ள Town Hall ரயில் நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 07 அக்டோபர் 2025 செவ்வாய்க்கிழமை
07/10/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 07/10/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
விண்வெளிக்கு செலவழிக்கும் பணத்தை ஏன் இந்தியா மனிதவளதிற்கு செலவழிக்கக்கூடாது? – ISROவின் நாராயணன் பதில்
06/10/2025 Duración: 17minஉலகம் வியந்துபார்க்கும் வகையில் சாதனை படைத்து வருகிறது இந்திய விண்வெளி ஆய்வுத்துறை. அடுக்கடுக்கான சாதனைகளைப் படைக்கும் இந்திய விண்வெளித்துறையின் செயலாளராகவும், இந்திய விண்வெளி ஆய்வு மையமான ISRO அமைப்பின் தலைவராகவும் பணியாற்றுகிறார் முனைவர் V. நாராயணன் அவர்கள். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருக்கும் அவரை SBS ஒலிப்பதிவுகூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் றைசெல். Part 3.
-
உங்களது வருமானவரியைத் தாக்கல் செய்துவிட்டீர்களா? காலக்கெடு நெருங்குகிறது!
06/10/2025 Duración: 03min2024/2025ஆம் ஆண்டுக்கான Tax return -வரிக்கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்குகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
செய்தியின் பின்னணி : புதிய காலம் - Spring வசந்தம்! எதில் எச்சரிக்கை தேவை?
06/10/2025 Duración: 07minஆஸ்திரேலியர்களில் பாதிக்கு மேற்பட்டோர் உணவு வழியாக பரவும் நோய்களை தங்களின் மிகப் பெரிய உணவு பாதுகாப்பு கவலையாகக் கருதுவதாக ஆய்வொன்று கூறுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
எனது இந்திய விண்வெளி ஆய்வுப் பயணத்தில் நான் மகிழ்ந்த தருணங்கள் – ISRO தலைவர் நாராயணன்
06/10/2025 Duración: 14minஉலகம் வியந்துபார்க்கும் வகையில் சாதனை படைத்து வருகிறது இந்திய விண்வெளி ஆய்வுத்துறை. அடுக்கடுக்கான சாதனைகளைப் படைக்கும் இந்திய விண்வெளித்துறையின் செயலாளராகவும், இந்திய விண்வெளி ஆய்வு மையமான ISRO அமைப்பின் தலைவராகவும் பணியாற்றுகிறார் முனைவர் V. நாராயணன் அவர்கள். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருக்கும் அவரை SBS ஒலிப்பதிவுகூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் றைசெல். Part 2.
-
இன்றைய செய்திகள்: 06 அக்டோபர் 2025 திங்கட்கிழமை
06/10/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 06/10/2025) செய்திகள். வாசித்தவர்: செல்வி.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
05/10/2025 Duración: 09minமத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் சிரப் குடித்த 16 குழந்தைகள் பலி - 2 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இருமல் சிரப்பை வழங்க கூடாது என்று இந்திய அரசு உத்தரவு; பாஜக-விஜய் இடையே மறைமுக கூட்டணி?; கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி?; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
வாங்கும் சம்பளத்திற்கு குறைவான வரி செலுத்தும் முறைகள் என்ன?
04/10/2025 Duración: 11minஒருவர் அதிக சம்பளம் பெறும்போது வரி செலுத்தும் விகிதம் அதிகரிக்கிறது. ஆனால் வரி குறைவாக செலுத்தும் சில வழிகளையும் அரசு அனுமதிக்கிறது. அப்படி வரியை குறைக்கும் Salary Sacrifice முறை பற்றி விளக்குகிறார் ஆஸ்திரேலியாவில் Chartered Accountant தகுதியுடன் கடந்த சுமார் இருபது ஆண்டுகளாக பணியாற்றும் ஆம்ஸ்ட்ராங் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
-
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (28 செப்டம்பர் – 4 அக்டோபர் 2025)
04/10/2025 Duración: 05minஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (28 செப்டம்பர் – 4 அக்டோபர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 4 அக்டோபர் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
Daylight saving நேரமாற்றம் நடைமுறைக்கு வருகிறது!
03/10/2025 Duración: 02minஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் Daylight saving நேரமாற்றம் நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை!
03/10/2025 Duración: 02minநீண்ட வார விடுமுறைக் காலத்தையொட்டி ACT மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சாலைவிதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
"Almost double the rate of hostility and violence": How ableism impacts people with disability - SBS Examines : மாற்றுத்திறனாளர்கள் மீதான பாகுபாடு அவர்களை எவ்வாறு பாதிக்கிறது?
03/10/2025 Duración: 07minMore than one in five Australians have a disability. But this large, diverse group faces disproportionate levels of discrimination and prejudice. - ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 22% பேர் மாற்றுத்திறனாளர்கள். உண்மையில், ஆஸ்திரேலியர்களில் ஐந்தில் ஒருவர் மாற்றுத்திறனுடன் வாழ்கிறார். ஆனால் அவர்களில் பலரின் அனுபவங்கள் — குறிப்பாக அவர்கள் அடிக்கடி சந்திக்கும் துன்புறுத்தல்கள் — எவருக்கும் தெரியாமல், கேட்கப்படாமலேயே உள்ளன.
-
செய்தியின் பின்னணி: 5% Deposit Scheme விரைவான நுழைவா அல்லது மறைந்துள்ள அபாயமா?
03/10/2025 Duración: 07minநாட்டில் First Home Buyers - முதலாவது வீடு வாங்குபவர்களுக்கான அரசின் புதிய 5% Deposit Scheme - முற்பணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை வழங்குகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
வாங்கும் சம்பளத்திற்கு குறைவான வரி செலுத்தும் முறைகள் என்ன?
03/10/2025 Duración: 11minஒருவர் அதிக சம்பளம் பெறும்போது வரி செலுத்தும் விகிதம் அதிகரிக்கிறது. ஆனால் வரி குறைவாக செலுத்தும் சில வழிகளையும் அரசு அனுமதிக்கிறது. அப்படி வரியை குறைக்கும் Salary Sacrifice முறை பற்றி விளக்குகிறார் ஆஸ்திரேலியாவில் Chartered Accountant தகுதியுடன் கடந்த சுமார் இருபது ஆண்டுகளாக பணியாற்றும் ஆம்ஸ்ட்ராங் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
-
இன்றைய செய்திகள்: 03 அக்டோபர் 2025 - வெள்ளிக்கிழமை
03/10/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 03/10/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.