Sbs Tamil - Sbs

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • How to become an Australian citizen? - ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுவது எப்படி?

    16/02/2024 Duración: 10min

    You can become a citizen of Australia in different ways. You must meet our criteria before you apply. Mr Jai Kandavadivelan who is the Director of KNpact Migration Services in Sydney explains the procedure in this feature - ஆஸ்திரேலிய குடியுரிமை ஏன் பெற வேண்டும் அதில் உள்ள நன்மைகள் யாவை மேலும் அதற்கான வழிகள் மற்றும் தகமைகள் என்ன? நடைமுறை என்ன? KNpact Migration Services நிறுவனத்தின் இயக்குனரும் குடிவரவு முகவருமான ஜெய் கந்தவடிவேலன் அவர்கள் வழங்கும் விரிவான விளக்கத்துடன் விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • விமானம் தாமதம் என்று கவலைப்படுகிறீர்களா? - இழப்பீடு பெற்றுத்தரும் புதிய சட்டம் வரக்கூடும்

    15/02/2024 Duración: 02min

    ரத்து செய்யப்பட்ட அல்லது தாமதமான விமான சேவைக்காக விமான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு செலுத்த வழிவகுக்கும் புதிய சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தில் அறிமுகமாகவுள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • Sydney house prices force thousands of young families out of NSW - Productivity Commission - பேரக்குழந்தைகள் இல்லாத நகரமாக சிட்னி மாறுகிறதா?

    15/02/2024 Duración: 08min

    Sydney is at risk of becoming "the city with no grandchildren", a senior government official has warned, as high housing costs drive young families to leave. Sydney lost about 35,000 people aged 30-40 between 2016 and 2021, according to the NSW Productivity Commission. Praba Maheswaran presents a news explainer. - சிட்னியின் வீட்டு விலைகள் ஆயிரக்கணக்கான இளம் குடும்பங்களை NSW இலிருந்து வெளியேற்றுகின்றன என்று productivity commission தெரிவித்துள்ளது. சிட்னி the city with no grandchildren - பேரக்குழந்தைகள் இல்லாத நகரமாக மாறும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியொன்றினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • “முன்னிரவு மயக்கங்கள்” – சிறுகதை

    15/02/2024 Duración: 16min

    பேராசிரியர் ஆசி.கந்தராஜா அவர்கள் ஆஸ்திரேலிய மண்ணில் இலக்கியம் படைக்கும் மிகச் சிலரில் ஒருவர். அவரின் பல புனைவுகள், சிறுகதைகள் பெரும் பாராட்டுகளை வாங்கிக் குவித்தவை. இலக்கியத்திற்காக பல விருதுகளை வாங்கிய அவர் எழுதிய “முன்னிரவு மயக்கங்கள்” எனும் சிறுகதை அவரின் “உயரப்பறக்கும் காகங்கள்” நூலில் இடம்பெற்றது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு, குறிப்பாக, 2004 ஆம் ஆண்டு SBS தமிழ் ஒலிபரப்பில் ஒலித்த இந்த கதையை மறு ஒலிபரப்பு செய்கிறோம். கதையை வாசித்தவர்கள்: பாலசிங்கம் பிரபாகரன் & திலகா பிரபாகரன். தயாரிப்பு: றைசெல்.

  • Navigating the Feasibility of a Two-State Solution for Palestine and Israel - பாலஸ்தீனம் – இஸ்ரேல்: ஒரு நாடா அல்லது இருநாடா? தீர்வு என்ன?

    15/02/2024 Duración: 09min

    Although Israel and Palestine function as separate political entities, Palestine is still under Israeli control. However, nations supporting Israel have advocated for the establishment of Palestine as an independent country, suggesting that the "two-state" solution, often proposed by various countries, is the most viable resolution. R. Sathyanathan, a seasoned professional in the media industry, provides an explanation of the "two-state" solution. Produced by RaySel. - இஸ்ரேலும், பாலஸ்தீனமும் இரு நாடுகளாக அரசியல் ரீதியில் இயங்கினாலும் பாலஸ்தீனம் இன்றும் இஸ்ரேலின் கட்டுப்பாடில்தான் இருக்கிறது. ஆனால் பாலஸ்தீனம் எனும் நாட்டை முழுமையாக தனி நாடாக மாற்றுவது என்றும் “பாலஸ்தீனம் – இஸ்ரேல்” எனும் இருநாடுகள் தீர்வே சிறந்தது என்றும் இஸ்ரேலை ஆதரிக்கும் நாடுகள் கூறத்துவங்கியுள்ளன. ஆனால் இது சாத்தியமா என்று விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

  • திருமணம் செய்ய “engagement” செய்திருப்பதாக பிரதமர் அறிவித்தார்!

    15/02/2024 Duración: 04min

    செய்திகள்: 15 பெப்ரவரி 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்

  • Teachers vs. Tech - Who takes the lead in shaping tomorrow's minds? - ஆஸ்திரேலிய பள்ளிகளில் இனி குழந்தைகளுக்கு கற்றுத்தரப்போவது ஆசிரியரா அல்லது AI தொழில்நுட்பமா?

    14/02/2024 Duración: 11min

    The Federal Government has recently released an Artificial Intelligence Framework for Australian schools. Suganya, the program producer for Brisbane's 4EB Tamil Oli, presents the details found in the Framework. - ஆஸ்திரேலியாவின் பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் Artificial Intelligence கட்டமைப்பு குறித்த விளக்கத்தை பெடரல் அரசு சமீபத்தில் வெளியிட்டது. இதிலுள்ள முக்கிய அம்சங்களை பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலி வானொலியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சுகன்யா அவர்களின் விளக்கத்தோடு முன்வைக்கிறோம். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

  • GST மீளப்பெறுதலில் மோசடி : ATO ஊழியர்கள் சிலர் பணிநீக்கம்

    14/02/2024 Duración: 02min

    GST மீளப்பெறுதலில் இடம்பெற்றுள்ள மோசடி குறித்த ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கையில், சில ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக வரி திணைக்களம் (ATO) தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • They show their ‘love’ through Blood ! - இரத்த தானம் செய்து நன்றி சொல்லும் ‘காதலர்கள்’

    14/02/2024 Duración: 08min

    Over 50 refugees rolled up their sleeve on Valentine’s Day to show their love and appreciation to the Australian community for having given them a safe haven for over 10 years. - காதலர் தினத்தன்று, ஐம்பதிற்கும் மேற்பட்ட அகதிகள் ஒரு புதுமையான வகையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுக்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்கிய ஆஸ்திரேலிய மக்களுக்குத் தங்கள் அன்பையும் பாராட்டையும் வெளிக்காட்டினார்கள்.

  • அரசி இரண்டாம் எலிசபெத்தின் படத்திற்கு பதிலாக எது இடம்பெறவேண்டும்?

    14/02/2024 Duración: 02min

    ஆஸ்திரேலியாவின் 5 டாலர் நோட்டில் இருக்கும் காலமான அரசி இரண்டாம் எலிசபெத்தின் படத்தை மாற்றியமைக்கும் RBA ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி, மக்களிடம் ஆலோசனை கேட்கிறது. இது குறித்த செய்தியை முன்வைக்கிறார் றைசெல்.

  • Is the baby's name Mustafa or Murugan? - குழந்தையின் பெயர் முஸ்தபாவா? முருகனா? – ஒரு காதல் கதை

    14/02/2024 Duración: 16min

    This is the love story of Elangovan and Sabira, a couple from Tamil Nadu living in Australia. Elangovan, a Hindu, and Sabira, a Muslim, share with us the challenges they faced when they decided to get married. Produced by RaySel. - ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் தமிழ்நாட்டைச் சார்ந்த இளங்கோவன் – சபிரா தம்பதியினரின் காதல் கதை இது. இந்து சமயத்தை சார்ந்த இளங்கோவனும் இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்த சபிராவும் திருமணம் செய்ய முடிவு செய்தபோது எதிர்கொண்ட சிக்கல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கின்றனர். அவர்களோடு உரையாடியவர்: றைசெல்.

  • விடுவிக்கப்பட்ட நிலங்களை அரசு மீண்டும் கையகப்படுத்த முயற்சிக்கிறதா?

    14/02/2024 Duración: 08min

    இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து 15 வருடங்களாகின்ற போதிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீனவர் பிரச்சினைகள், பௌத்த மயமாக்கல் மற்றும் காணி அபகரிப்பு விடுவிக்கப்பட்ட நிலங்களை மீளவும் கையகப்படுத்தும் முயற்சிகள் போன்ற பல பிரச்சினைகள் தற்பொழுதும் தொடர்ந்து கொண்டுள்ளன. இவை குறித்து “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • Money laundering, bribery: New report on offshore processing contracts raises big questions - ஆஸ்திரேலியாவிற்கு வெளியே அகதிகளை பரிசீலனை செய்யும் நடைமுறை குறித்த மதிப்பாய்வு சொல்வது என்ன?

    13/02/2024 Duración: 10min

    The review looked at allegations the Home Affairs Department used contractors to deliver regional processing services that were suspected of misusing taxpayer money in Nauru and Papua New Guinea. This feature explains more. - Offshore detention ஆஸ்திரேலியாவிற்கு வெளியே குடிவரவு தடுப்புக் காவலில் வைத்து புகலிடக்கோரிக்கைகளை பரிசீலனை செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்த லஞ்சம், பணமோசடி மற்றும் பிற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் ஒப்பந்தம் வழங்கியுள்ளதாக மதிப்பாய்வு அறிக்கை ஒன்று கண்டறிந்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை வழங்குகிறார் செல்வி.

  • விக்டோரியாவில் இலட்சக்கணக்கானோருக்கு மின்சாரம் துண்டிப்பு

    13/02/2024 Duración: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 14/02/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • “Singing in Tamil is my signature” - Sanjay Subrahmanyan - “தமிழில் பாடுவது என் தனி முத்திரை” - விரைவில் சிட்னி வரும் சஞ்சய் சுப்ரமண்யன்

    13/02/2024 Duración: 12min

    Sanjay Subrahmanyan has made a unique mark among Carnatic music singers. Having made his debut as a popular stage singer at an early age, he is no stranger to Australian stages – particularly Sydney. He is coming back to Sydney after a long break. - கர்நாடக இசைப் பாடகர்களில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளவர் சஞ்சய் சுப்ரமண்யன். சிறு வயதிலேயே பிரபல மேடைப் பாடகராக அறிமுகமாகிய இவர், ஆஸ்திரேலிய மேடைகளுக்கு – குறிப்பாக சிட்னி மேடைகளுக்குப் புதியவர் அல்ல. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் சிட்னி வருகிறார்.

  • இடைவெளியைக் குறைக்க, புதிதாக 3,000 வேலை வாய்ப்புகள்

    13/02/2024 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 13/02/2024) ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.

  • ஆஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர்களுக்கான சில விசா மாற்றங்களில் இந்தியர்களுக்கு விதிவிலக்கு!!

    13/02/2024 Duración: 02min

    பெடரல் அரசின் புதிய குடிவரவு கொள்கை உத்தியின் சில பகுதிகளிலிருந்து இந்தியாவில் இருந்து வந்த சர்வதேச மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த திறமையான புலம்பெயர்ந்தோருக்கு விலக்கு அளிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • NSW பள்ளிக்கூட மாணவர்களுக்கு தட்டம்மை பரவல் எச்சரிக்கை!!

    12/02/2024 Duración: 02min

    வடக்கு நியூ சவுத் வேல்ஸில் வசிப்பவர்கள் அம்மை நோய் அறிகுறிகளைக் கண்காணிக்கும்படி சுகாதார அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • How to start your small business in Australia - ஆஸ்திரேலியாவில் புதிதாக சிறு வணிகமொன்றை ஆரம்பிப்பது எப்படி?

    12/02/2024 Duración: 08min

    Starting a business in Australia has several advantages. These include support for innovation, entrepreneurship, and small business growth through infrastructure, a skilled workforce, government initiatives, grants, funding, and tax incentives. - ஆஸ்திரேலியாவில் புதிதாக சிறுத் தொழில் தொடங்க விரும்பவர்களுக்கு உள்ள வாய்ப்புகள் மற்றும் கிடைக்கும் உதவிகள் குறித்து விளக்குகிறது இந்த விவரணம். ஆங்கிலத்தில் Maram Ismail எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

  • They Ride for Ceylon ! - இலங்கையில் இந்த சைக்கிள் சவாரி எதற்கு?

    12/02/2024 Duración: 20min

    Kumar Kalyanakumar, Niranjan Navaratnam, and Pradeep Gnanasekaram are preparing for a journey to Sri Lanka, where they will embark on a cycling expedition across different regions of the country.. - இலங்கையில் இணக்கத்தைத் தேடியும், மருத்துவ சேவைகள் வழங்கும் ஒரு மருத்துவ மனையின் தேவைகளுக்கு உதவும் நோக்குடனும் இலங்கைத் தீவின் பல பகுதிகளினூடாகவும் நடத்தப்படும் சைக்கிள் சவாரியில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கை செல்லவிருக்கும் மூவர் – குமார் கல்யாணகுமார், நிரஞ்சன் நவரட்ணம், மற்றும் பிரதீப் ஞானசேகரம், தமது அனுபவங்களை குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

página 23 de 25