Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
இன்றைய செய்திகள்: 02 ஜனவரி 2026 - வெள்ளிக்கிழமை
02/01/2026 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 02/01/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள்
01/01/2026 Duración: 08minசர்ச்சைக்குள்ளாகியிருக்கும் யாழ். தையிட்டி விகாரையில் புதிய கட்டுமானங்களை நிறுத்த விகாராதிபதி இணக்கம்; நாடு முழுவதும் புதுவருட கொண்டாட்டங்கள் இடம் பெறுகையில் மட்டக்களப்பில் கொண்டாட்டங்களுக்கு மாநகர சபை அனுமதி மறுப்பு உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
உலகம்: இந்த வார முக்கிய செய்திகள்
01/01/2026 Duración: 07minஉக்ரைன்- ரஷ்யா போர் நிலவரம்; காசாவில் தொண்டு நிறுவனங்களுக்கு தடை; வெனிசுலாவுக்குள் அமெரிக்காவின் தாக்குதல்; சோமாலிலாந்தை அங்கீகரித்துள்ள இஸ்ரேல்; நியூயார்க் மேயராக மம்தானி உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
How to cope during a heatwave in Australia - கோடைகால வெப்ப அலையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி?
01/01/2026 Duración: 10minSummer in Australia can be very hot, and as our climate continues to warm, heatwaves are expected to become more frequent and more intense. In this episode of Australia Explained, we cover what a heatwave is, why they pose such a significant risk to human health, who is at most risk, and how to best prepare to cope with a heatwave. - Heatwaves- வெப்ப அலைகள் ஏற்படுத்தும் அபாயங்களை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? ஆஸ்திரேலியாவில் வெப்ப அலைகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றால் ஏற்படும் ஆபத்துகளையும், அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பதையும் அறிந்து கொள்வது முக்கியம். இதுதொடர்பில் Phil Tucak ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்
-
சுவையான மைசூர் பாகு செய்முறை!
01/01/2026 Duración: 08minபண்டிகைக்காலத்தில் உண்டு மகிழக்கூடிய மைசூர் பாகு செய்முறையை பிரபல சமையல்கலை, அழகுக்கலை மற்றும் கேக் வடிவமைப்பு நிபுணர் சாந்தா ஜெயராஜ் அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
செய்தியின் பின்னணி: திருப்புமுனையில் உலகம் - 2026-இன் சவால்கள்
31/12/2025 Duración: 11minஉலகம் எதிர்பார்ப்பதுபோன்று 2026 ஒரு சாதாரண ஆண்டாக அமையாது என்றே பல ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், சமூகம், சமயம் என்று பல அம்சங்களில் இன்றைய உலகம் பல துறைகளிலும் ஒரே நேரத்தில் கடும் அழுத்தத்தை எதிர்கொள்கிறது. இது குறித்த தகவல்களை தொகுத்தளிக்கிறார் றைசெல்.
-
2026இல் ஆஸ்திரேலியாவில் செய்ய விரும்பும் மாற்றங்கள் - நேயர்கள் சிலரின் பதில்
31/12/2025 Duración: 12minஉங்களுக்கு ஒரு மந்திர சக்தி கிடைத்தால் 2026இல் ஆஸ்திரேலியாவில் என்ன மாற்றம் செய்ய விரும்புகிறீர்கள் என்று எமது நேயர்கள் சிலரிடம் கேட்டோம். அவர்கள் வழங்கும் பதில்களை தொகுத்து வழங்குகிறார் செல்வி.
-
செய்தியின் பின்னணி: 2026 ஜனவரி 1 - நடைமுறைக்கு வரும் செலவுகள், சலுகைகள் மற்றும் விதிகள்
31/12/2025 Duración: 09min2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல், நாட்டில் பல முக்கிய அரச விதிமுறைகள் மற்றும் செலவுசார்ந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. மருந்து விலைக் குறைப்பு, Centrelink கொடுப்பனவு உயர்வு, குழந்தைகள் பராமரிப்பு உதவி மாற்றங்கள் போன்ற நன்மைகளுடன், கடவுச்சீட்டுக்கான கட்டண உயர்வு, சாலை Toll கட்டண அதிகரிப்பு போன்ற செலவுகளும் இடம்பெறுகின்றன. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
செய்தியின் பின்னணி: 2026-இல் வீடுகளின் நிலவரம் எப்படி இருக்கும்?
31/12/2025 Duración: 07minஎதிர்வரும் 2026இலும் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பொருளாதார பிரச்சினைகளில் ஒன்றாக வீட்டு வசதி நெருக்கடி இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
2025-இல் உலகை வியக்க வைத்த அறிவியல் கண்டுபிடிப்புகள்
31/12/2025 Duración: 12minகடந்து செல்லும் 2025 ஆண்டு அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் பல விந்தைகளை ஏற்படுத்திய ஆண்டு. இவைகளை தொகுத்தளிக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
-
இன்றைய செய்திகள்: 31 டிசம்பர் 2025 புதன்கிழமை
31/12/2025 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 31/12/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இலங்கை: டக்ளஸ் தேவானந்தாவின் கைதும், பின்னணியும்
30/12/2025 Duración: 08minஇலங்கையில் முன்னாள் அமைச்சரும் ஈ.பி.டி.பி.யின் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
சிட்னியில் பொது இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த சதி: இளைஞர் கைது
30/12/2025 Duración: 02minசிட்னியின் தென் மேற்கு பகுதியில் பொது இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
மெல்பன் உட்பட பல நகரங்களுக்கு நீர் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் வாய்ப்பு!
30/12/2025 Duración: 02minவறட்சி நிலை தீவிரமடைந்துள்ளதால், மெல்பன் உட்பட பல நகரங்களுக்கு நீர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 30 டிசம்பர் 2025 செவ்வாய்க்கிழமை
30/12/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 30/12/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
விக்டோரியாவில் பொதுப் போக்குவரத்துக் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது!
29/12/2025 Duración: 02minவிக்டோரியாவில் பொதுப் போக்குவரத்துக் கட்டணம் ஜனவரி 1 முதல் உயர்கிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
செய்தியின் பின்னணி : 2026-இல் சர்வதேச விமான பயணத்தில் அறிமுகமாகும் மாற்றங்கள்!
29/12/2025 Duración: 06min2026-இல் பல ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள் புதிய சர்வதேச விமான வழிதடங்களை அறிமுகப்படுத்துகின்றன. ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களில் கூடுதல் விமான சேவைகள் சேர்க்கப்படுகின்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
இன்றைய செய்திகள்: 29 டிசம்பர் 2025 - திங்கட்கிழமை
29/12/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 29/12/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
இந்தியா 2025: ஒரு மீள்பார்வை
28/12/2025 Duración: 07min2025ஆம் ஆண்டில் இந்தியாவில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள், நிகழ்வுகள் மற்றும் அதிகம் பேசப்பட்ட செய்திகளின் தொகுப்பை முன்வைக்கிறார் நமது செய்தியாளர் ராஜ்.
-
தமிழ்நாடு 2025: ஒரு மீள்பார்வை
28/12/2025 Duración: 07min2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள், நிகழ்வுகள் மற்றும் அதிகம் பேசப்பட்ட செய்திகளின் தொகுப்பை முன்வைக்கிறார் நமது செய்தியாளர் ராஜ்.