Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
வரி ஏய்ப்பு செய்பவர்கள் வெளிநாடு செல்ல முடியாது- ATO கடும் நடவடிக்கை
07/01/2026 Duración: 02minகணிசமான வரி நிலுவைகளை வேண்டுமென்றே செலுத்தாமல் இருப்பவர்கள், வெளிநாடுகளுக்குச் செல்வதில் தடைகளை எதிர்கொள்ள நேரிடலாம். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
நாதஸ்வரம் எப்படி உருவாகிறது? மரத்தை இசையாக்கும் நரசிங்கம்பேட்டை
07/01/2026 Duración: 07minதமிழ் பண்பாடு சார்ந்த இசைக்கச்சேரிகள் முதல் திருமணங்கள் வரை நாதஸ்வரம் எனும் இசைக்கருவி தமிழர்களின் வாழ்வில் இணைந்திருக்கிறது. அப்படியான நாதஸ்வரம் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் நரசிங்கம்பேட்டையில் உருவாக்கப்பட்டு வருகிறது. புவிசார் குறியீட்டைக் கொண்ட நரசிங்கம்பேட்டை நாதஸ்வர உருவாக்கத்தின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
ஆஸ்திரேலியாவில் அதிகளவானோருக்கு வைக்கப்படும் பெயர்கள் எவை தெரியுமா?
07/01/2026 Duración: 02minஆஸ்திரேலியர்கள் தமது பிள்ளைகளுக்கு சூட்டும் பெயர்களில் மிகவும் பிரபலமானவை எவை என்ற புதிய பட்டியல் வெளியாகியுள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
விக்டோரிய மாநில உயர்தர பரீட்சையில் தமிழ் பாடத்தில் சாதித்த மாணவர்கள்!
07/01/2026 Duración: 18minவிக்டோரியா மாநிலத்தில் 2025 VCE பரீட்சையில் தமிழ் பாடத்தில் அதிகூடிய புள்ளிகளுடன் முதல் ஐந்து இடங்களைப் பெற்றுள்ள வினோஜன் பிரபாகரன், காவ்யா செல்வரூபன், ஹவீஷ் சுரேந்திரன், ஆகீஷன் உதயகுமார், சஹானி கௌரிதரன் மற்றும் திவா விவேகானந்தன் ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
செய்தியின் பின்னணி: பேரழிவுகரமான தீ ஏற்படும் அபாயத்தில் ஆஸ்திரேலிய நகரங்கள்!
07/01/2026 Duración: 05minநாடு முழுவதும் பெரும் பகுதிகளுக்கு கடும் வெப்ப அலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
-
இன்றைய செய்திகள்: 07 ஜனவரி 2026, புதன்கிழமை.
07/01/2026 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 07/01/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இலங்கை: மாகாண சபைத் தேர்தல் தாமதமாகிறது
06/01/2026 Duración: 08minஇலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், மாகாண சபைத் தேர்தல்கள் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க நாடாளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிப்பதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
2026இல் ஆஸ்திரேலியர்களின் விருப்பத்திற்குரிய விடுமுறைத்தலங்கள் எவை?
06/01/2026 Duración: 02min2026 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்கள் விடுமுறைக்காக எந்த நாடுகளை குறிவைக்கிறார்கள் என்பதை புதிய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Your first steps to engaging with Indigenous Australians - பூர்வீக குடிமக்களுடன் அர்த்தமுள்ள உறவை உருவாக்குவதற்கான முதல் படிகள்
06/01/2026 Duración: 08minConnecting with Indigenous Australia can be daunting for a newcomer to the country. So, where do you start? We asked Yawuru woman Shannan Dodson, CEO of the Healing Foundation, about simple ways to engage with First Nations issues and people within your local community. - ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறியவர்கள், “Traditional Owners”, “Country”, அல்லது “First Nations” போன்ற சொற்களை அடிக்கடி கேட்கலாம் அல்லது பார்க்கலாம். பலரும் இதன் அர்த்தத்தைப் புரிந்து, அவர்களுடன் மரியாதையுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறார்கள். ஆரம்பத்தில், இதற்கான முதலாவது படிகளை எடுப்பது சற்று குழப்பமாகவும், சந்தேகமூட்டுவதாகவும் இருக்கலாம். ஆனால் இது இங்குள்ள வாழ்க்கையும் வரலாற்றையும் புரிந்து கொள்ள ஒரு முக்கிய வழியாகும்.
-
இன்றைய செய்திகள்: 06 ஜனவரி 2026 செவ்வாய்க்கிழமை
06/01/2026 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 06/01/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
வெனிசுவேலாவில் நடந்தது என்ன? இனி என்ன நடக்கலாம்?
05/01/2026 Duración: 18minவெனிசுவேலா நாட்டில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க படையால் கைது செய்யப்பட்டு அமெரிக்காவில் சிறை வைக்கப்பட்டுள்ளார். இந்த பின்னணியில் வெனிசுவேலாவில் நடந்தது என்ன என்பதையும், அமெரிக்க அரசியலில் அதிபர் டிரம்பின் செல்வாக்கு எப்படி உள்ளது என்பது குறித்தும், ஐ.நா என்ன செய்யக்கூடும் என்பது குறித்தும் அலசுகிறார் அமெரிக்காவின் Salisbury பல்கலைக்கழகத்தின் Conflict Analysis and Dispute Resolution பிரிவின் தலைவராக இருக்கும் பேராசிரியர் கீதபொன்கலன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
-
தமிழ்ச் சூழலில் பெண்ணடிமைத்தனத்தையும் சாதியையும் பிரிக்க முடியாது- ஓவியா
05/01/2026 Duración: 19minபெரியாரியப் பின்னணி கொண்ட சமூக செயற்பாட்டாளர் R ஓவியா அவர்கள் அண்மையில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். பகுத்தறிவு, சமூக நீதி மற்றும் பெண்ணுரிமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் சிட்னி ஒலிப்பதிவுக் கூடத்தில் அவரை சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
விக்டோரியாவில் 18 வயதிற்குட்பட்டோருக்கு பொதுப் போக்குவரத்து இலவசம்!
05/01/2026 Duración: 02minவிக்டோரியாவில் அனைத்து குழந்தைகளுக்கும் இலவச பொதுப் போக்குவரத்து வசதியை வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
முதியோர் பராமரிப்பில் அறிமுகமாகியுள்ள Registered Supporter யார்? அவர்களின் பணி என்ன?
05/01/2026 Duración: 10minAged Care சட்டத்தின் கீழ் முதியவர்கள் தாங்களாகவே முடிவெடுக்கக்கூடியவாறு ஆதரவு வழங்கும் புதிய Registered Supporter திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இது குறித்த பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் முதியோர் நல மருத்துவர் டாக்டர் பூரணி முருகானந்தன். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
-
செய்தியின் பின்னணி : 2026-இல் ஆஸ்திரேலிய விசா நடைமுறையில் வரும் மாற்றங்கள்!
05/01/2026 Duración: 08min2026-இல் ஆஸ்திரேலியாவின் குடியேற்றக் கொள்கை ஒரு முக்கியமான மறுசீரமைப்பை எதிர்கொள்கிறது. Bondi கடற்கரை தாக்குதலுக்கு பிறகு இந்த சீரமைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி.
-
இன்றைய செய்திகள்: 05 ஜனவரி 2026 - திங்கட்கிழமை
05/01/2026 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 05/01/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
04/01/2026 Duración: 09minதர்மசாலா கல்லூரியில் பாலியல் வன்கொடுமையால் மாணவி மரணம்! கல்லூரி பேராசிரியர் மற்றும் மாணவிகள் மீது வழக்கு பதிவு; திருச்சியில் இருந்து மதுரைக்கு வைகோவின் சமத்துவ நடைபயணம்; பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (28 டிசம்பர் 2025 – 3 ஜனவரி 2026)
03/01/2026 Duración: 07minஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (28 டிசம்பர் 2025 – 3 ஜனவரி 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறார் Usman Khawaja!
02/01/2026 Duración: 02minஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் Usman Khawaja, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
மேற்கு ஆஸ்திரேலிய மாநில உயர்தர பரீட்சையில் தமிழ் பாடத்தில் சாதித்த மாணவர்கள்!
02/01/2026 Duración: 14minமேற்கு ஆஸ்திரேலிய மாநில பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வான WACE பரீட்சையில் தமிழ் பாடத்தில் அதிகூடிய புள்ளிகளுடன் முதலாவது இடத்தைப் பெற்றுள்ள நிவேதிகா மனோகரன், இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ள அகநிலா சதீஸ்குமார், மூன்றாமிடத்தைப் பெற்றுள்ள அரசி கார்த்திகேயன் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா தெற்கு தமிழ்ப்பள்ளி முகாமைத்துவ பணிப்பாளர் உமாகாந்தன் செல்வநாயகம் ஆகியோருடன் உரையாடுகிறார் செல்வி.