Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
2026 ஆஸ்திரேலிய வீட்டுச் சந்தை கணிப்பு : எங்கு வீட்டு விலை அதிகரிக்கும்?
13/01/2026 Duración: 03min2026-இல் ஆஸ்திரேலிய வீட்டுச் சந்தை முன்கணிப்பு நிலவரங்கள், வீட்டு விலை அதிகரிப்பிலும், வாடகை நிலைகளிலும் மாறுபட்ட எதிர்பார்ப்புகளை காட்டுகின்றன. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
-
இன்றைய செய்திகள்: 13 ஜனவரி 2026 - செவ்வாய்க்கிழமை
13/01/2026 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 13/01/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
கோரப்படாத பல கோடி டாலர்கள் : உங்கள் பங்கு உள்ளதா?
12/01/2026 Duración: 03minஆஸ்திரேலியாவில் பல கோடி டாலர்கள் கோரப்படாத மறக்கப்பட்ட பணமாக உரிமையாளர்களுக்காக காத்திருக்கின்றன. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
-
சிட்னியில் தமிழர் திருநாள் பொங்கல் விழா!
12/01/2026 Duración: 08minசிட்னியில் Merrylands எனுமிடத்தில் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்தும் பொங்கல் விழா ஜனவரி மாதம் 15 ஆம் தேதி வியாழக்கிழமை மதியம் 1 மணி முதல் மாலை 8 மணிவரை நடைபெறுகிறது. இந்த பொங்கல் விழா குறித்து பல தமிழர் அமைப்புகளின் ஒருங்கிணைந்த சிட்னி பொங்கல் ஏற்பாட்டுக்குழு சார்பாக சிட்னி தமிழ்மன்றம் சார்பில் முத்தரசு அவர்களும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கணேசன் அவர்களும் உரையாடுகின்றனர். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.
-
செய்தியின் பின்னணி : Bondi பயங்கரவாத தாக்குதல் குறித்து ராயல் கமிஷன் விசாரணை அறிவிப்பு!
12/01/2026 Duración: 08minBondi கடற்கரை பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்ய ராயல் கமிஷன் அமைக்கப்படுவதாக கடந்த வாரம் பிரதமர் Anthony Albanese அறிவித்தார். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி.
-
இன்றைய செய்திகள்: 12 ஜனவரி 2026 - திங்கட்கிழமை
12/01/2026 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 12/01/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார செய்திகளின் தொகுப்பு
11/01/2026 Duración: 09minதமிழக சட்டசபை தேர்தலுக்கான அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்தது பாட்டாளி மக்கள் கட்சி; பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வந்த விஜயின் 'ஜனநாயகன்' படம் திரைக்கு வருவதில் தடை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
‘அதிகாரம் யார் கையில் உள்ளதோ அவர்கள் பக்கம் எழுத்தாளர்கள் சாயும் சூழல் உருவாகியுள்ளது’ - தீட்சண்யா
11/01/2026 Duración: 13minகவிதை, கட்டுரை, மேடைப்பேச்சு எனப் பல்வேறு தளங்களில் சமூக அவலங்கள் குறித்த தனது பார்வைகளை முன்வைத்து வருபவர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா. எழுத்திற்கு அப்பால், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். கருத்துரிமை, எழுத்துச்சூழல், தமிழகத்தில் நிலவும் சமூகப்போக்கு பற்றிய கேள்விகளுடன் அவரைச் சந்தித்து உரையாடியவர் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (4 – 10 ஜனவரி 2026)
10/01/2026 Duración: 08minஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (4 – 10 ஜனவரி 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
-
செய்தியின் பின்னணி: Ashes 2025/26 – ஆஸ்திரேலிய கிரிக்கெட் வெற்றிக் கதை!
09/01/2026 Duración: 09minAshes 2025/26 தொடர், வெறும் Test போட்டிகளின் வரிசையாக அல்லாமல், Test cricket-ன் உண்மையான ஆன்மாவை முழுமையாக வெளிப்படுத்திய ஒரு நீண்ட கிரிக்கெட் காவியமாக அமைந்து முடிந்துள்ளது. Australia-வின் தொடர்ச்சியான ஆதிக்கம், England-ன் உறுதியான எதிர்ப்பு, மற்றும் பிரியாவிடைத் தருணங்கள் என இந்த ஐந்து Test போட்டிகளின் பயணம் ஓர் ஆழமான போராட்டமாக கிரிக்கெட் வரலாற்றில் பதியப்பட்டது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இன்றைய செய்திகள்: 09 ஜனவரி 2026 - வெள்ளிக்கிழமை
09/01/2026 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 09/01/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
இலங்கை : இந்த வார முக்கிய செய்திகள்
08/01/2026 Duración: 08minவெனிசுவேலா மீது அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டு கொழும்பில் பல்வேறு தரப்பினரும் கண்டன ஆர்ப்பாட்டம்; அவசரகால சட்டத்தை மேலும் நீடிக்க நாடாளுமன்றம் அனுமதியளித்துள்ளது. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்
-
உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு
08/01/2026 Duración: 07minஅமெரிக்காவில் சிறைவைக்கப்பட்டுள்ள நிக்கோலஸ் மதுரோ, கிரீன்லாந்து-அமெரிக்கா; ஈரானில் பரவும் போராட்டம்; ஏமன் விவகாரத்தில் சவுதி அரேபியா- யுஏஇ இடையே முறுகல் போக்கு உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்
-
நீங்கள் வெளிநாடு செல்லும்போது ஆஸ்திரேலிய ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தி வாகனம் ஓட்டுபவரா?
08/01/2026 Duración: 02minவியட்நாமுக்கு சுற்றுலாச் செல்லும் ஆஸ்திரேலியர்கள் அங்கு வாகனம் ஓட்டுவது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
உலகில் No 1 வெனிசுவேலா பெட்ரோல் வளத்திற்கு அமெரிக்கா உரிமை கொண்டாடுவது ஏன்?
08/01/2026 Duración: 10minஉலகின் No 1 எண்ணெய் வளம் கொண்ட நாடு வெனிசுவேலா. இந்த எண்ணெய் அமெரிக்காவுக்குச் சொந்தமானது என்று அமெரிக்க அதிபர் Trump செல்வதன் அர்த்தம் என்ன என்று விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
-
துடிப்பு நின்ற இதயத்தை உங்களாலும் துடிக்க வைக்க முடியும்!!
08/01/2026 Duración: 12minஒருவரின் இதயம் ஏதாவது காரணத்தினால் திடீரென நின்று போனால் உடனே CPR செயவதினால் அதனை இயங்க வைத்து அவர் உயிரை காப்பாற்ற முடியும். CPR என்றால் என்ன? அதனை எல்லோரும் கற்க வேண்டிய அவசியம் என்ன போன்ற CPR குறித்த பல கேள்விகளுக்கு பதில் கூறுகிறார் Blacktown மற்றும் Westmead மருத்துவமனைகளில் Senior Emergency Specialistஆக பணியாற்றி வரும் டாக்டர் தயாமதி ஜெகநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
-
செய்தியின் பின்னணி: Child Care உதவி அதிகரிப்பு! வாரம் 3 நாட்கள் உத்தரவாதம்!
08/01/2026 Duración: 10minஜனவரி 5 ஆம் தேதி முதல், Child Care எனப்படும் குழந்தை பராமரிப்பு தொடர்பாக Child Care Subsidy - 3 Day Guarantee அல்லது குழந்தை பாராமரிப்புக்கு 3 நாட்கள் உத்தரவாதம் எனும் புதிய திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை SBS Newsயின் Sam Dover மற்றும் Jasmine Kassis எழுதிய விவரணத் தகவலோடு முன்வைக்கிறார் றைசெல்.
-
மற்றொரு Bondi நாயகனுக்கு ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிட உரிமை
08/01/2026 Duración: 02minBondi கடற்கரையில் நடந்த தாக்குதலின் போது, துப்பாக்கி ஏந்திய நபரை எதிர்கொண்ட ஒருவருக்கு ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட்டுள்ளதாக Daily Mail செய்தி வெளியிட்டுள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
கணினிப் பாவனை கண்ணுக்கு ஆபத்தா?
08/01/2026 Duración: 09minநமது வாழ்வில் கணினியும் ஒரு அங்கம் என்று ஆகிவிட்ட நிலையில் கணினிப் பாவனை கண் பார்வையைப் பாதிக்குமா என்பது தொடர்பிலும் கண் ஆரோக்கியத்தை எப்படிப் பேணலாம் என்பது தொடர்பிலும் விளக்குகிறார் மெல்பனைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்
-
இன்றைய செய்திகள்: 8 ஜனவரி 2026 வியாழக்கிழமை
08/01/2026 Duración: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 8/01/2026) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.